டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ் வழங்கும் ‘வெள்ளகுதிர’ பட புகழ் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் கோமலி பிரசாத் நடிக்கும் ’மண்டவெட்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது!

டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ் வழங்கும் ‘வெள்ளகுதிர’ பட புகழ் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் கோமலி பிரசாத் நடிக்கும் ’மண்டவெட்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது!

பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி இதற்கு முன்பு வெளியான புதுமையான மற்றும் தரமான படங்கள் எல்லைகள், மொழிகள் தாண்டி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அனுஷ்கா ஷெட்டியின் ‘அருந்ததி’, கல்யாணி பிரியதர்ஷனின் ’லோகா: சாப்டர்1’ போன்ற படங்கள் இந்திய சினிமாவில் முத்திரை பதித்தவை. அந்த வரிசையில் தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக உருவாகிறது ’வெள்ளகுதிர’ படப்புகழ் இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமாரின் ’மண்டவெட்டி’ திரைப்படம்.

கோமலி பிரசாத் நடிக்கும் ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜனவரி 28) பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக துவங்கியது. டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ் நிறுவனத்தில், சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கி, தயாரிக்கும் இந்த படம் காட்சியமைப்பிலும் கதை சொல்லலிலும் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்கும்.

’மண்டவெட்டி’ திரைப்படம் டார்க், சூப்பர்நேச்சுரல் கிரைம் திரில்லர் படமாக உருவாகிறது. இழப்பு, அடையாளம் மற்றும் சர்வைவல் ஆகியவற்றைப் பற்றி ஒரு பெண்ணின் உளவியல் மற்றும் உணர்வுப்பூர்வமான பயணத்தையும் மனித உணர்வுகளின் ஆழத்தையும் அதற்கு பின்னால் உள்ள மர்மத்தையும் பரபரப்பான களத்தில் இந்தப் படம் பேசும்.

வித்தியாசமான கதாபாத்திரங்களில் தனது திறமையான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகை கோமலி பிரசாத் இந்த படத்தில் சவால் மிகுந்த முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் தேனப்பன், கஜராஜ், அம்ரிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அனுபவமும் ஆர்வமும் மிக்க பலர் தொழில்நுட்பக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். கண்கவர் காட்சியமைப்பு, வலுவான பின்னணி இசை, இயல்பான ஆக்ஷன் காட்சிகள் ஆகியவை இணைந்து படத்தின் டார்க் மற்றும் சூப்பர்நேச்சுரல் கதைக்களத்திற்கு பொருந்தும் வகையில் சிறந்த திரை அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும்.

இயக்குநரும் தயாரிப்பாளருமான சரண்ராஜ் செந்தில்குமார் ‘மண்டவெட்டி’ படம் குறித்து பகிர்ந்து கொண்டதாவது, “உணர்வுகள், தீவிரம் மற்றும் துணிச்சலான கதை சொல்லலுடன் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை இந்தப் படம் திரையில் கொடுக்கும்” என்றார்.

நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் கலந்து கொள்ள படத்தின் பூஜை பாரம்பரிய முறைப்படி நடந்தது. படப்பிடிப்பு சிறப்பாக நடைபெற இறைவன் அருள் வேண்டினர். படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ள நிலையில், சூப்பர் நேச்சுரல் மற்றும் ஆழமான மனித உணர்வுகளுடன் ‘மண்டவெட்டி’ திரைப்படம் தொழில்நுட்ப ரீதியாகவும் கதையாகவும் வலுவான திரைப்படமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷூட்டிங் ஷெட்யூல் மற்றும் படம் குறித்தான அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும்.

தொழில்நுட்பக் குழு விவரம்:

பேனர்: டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ்,
தயாரிப்பு: சரண்ராஜ் செந்தில்குமார்,
இயக்கம்: சரண்ராஜ் செந்தில்குமார்,
ஒளிப்பதிவு: பிரகாஷ்,
படத்தொகுப்பு: குணா,
இசை: தீபக் வேணுகோபால்,
சண்டை பயிற்சி: கவுதம்,
ஆடை வடிவமைப்பு: சங்கீதா,
ஒப்பனை: நர்மதா,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *