
நாகேஷின் பேரன்
பிஜேஷ் நாகேஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் “வானரன்”
பத்மா கந்தசாமி எஸ்டேட்ஸ் சார்பில் ராமாபுரம்
எம்.கே ராஜேஷ் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுகிறார்
பகல் வேஷம் என்னும் கலையை பின் தொடரும் ஆஞ்சநேயர் வேடம் அணிபவர்களின் வாழ்வியலையும் தந்தை மகள் உறவை சொல்லும் கதைகளத்தையும் கொண்டு உருவாகி உள்ள படம்தான் வானரன் என்கிறார் ஸ்ரீராம் பத்மநாபன்.
பரபரப்பாக பேசப்பட்ட
” டூ “எனும் படத்தை இயக்கியவரான ஸ்ரீராம் பத்மநாபன் கதை திரைக்கதை வசனம் எழுதி இப்படத்தை இயக்கியுள்ளார் .ஆரஞ்ச் பிக்சர்ஸ் சார்பில் ராஜேஷ் பத்மநாபன்
சுஜாதா ராஜேஷ்
தயாரித்திருக்கிறார்கள்
சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம், பிரபுதேவா நடித்த பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில்
நடித்த நாகேஷ் பேரன் பிஜேஷ் நாகேஷ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். அக்ஷயா கதாநாயகியாக நடிக்க லொள்ளு சபா ஜீவா, தீபா சங்கர்,
ஆதேஷ் பாலா, நாஞ்சில் விஜயன், எஸ்.எல் பாலாஜி, பேபி வர்ஷா, வெங்கட்ராஜ் , சிவகுரு, ராம்ராஜ், வெடிக்கண்ணன், மேடை கலைஞர்களான நாமக்கல் விஜயகாந்த், ஜூனியர் டி.ஆர் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு-
நிரன் சந்தர்
இசை- ஷாஜகான்
பாடல்கள்- செந்தமிழ்
படத்தொகுப்பு-
வித்து ஜீவா
மக்கள் தொடர்பு – வெங்கட்
தயாரிப்பு –
ராஜேஷ் பத்மநாபன்
சுஜாதா ராஜேஷ்
கதை திரைக்கதை வசனம் இயக்கம்-
ஸ்ரீராம் பத்மநாபன்
இப்படத்தின் அனைத்து தொழில்நுட்ப வலைகளும் முடிவடைந்துவிட்டது. திரைக்கு வர தயாராக உள்ள நிலையில் வரும் மே16 ல் பிரபல அரசியல் முன்னணி பிரபிரபலங்கள் மற்றும் திரையுலக முன்னோடிகள் முன்னிலையில் படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெறுகிறது.