
ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த்- “டேவிட்டின் திரைக்கதை பல வாய்ப்புகளைக் கொடுத்து உற்சாகமாக்கியது” என்று டேவிட் கோப்பின் திரைக்கதையைப் பாராட்டுகிறார் இயக்குநர் கேரத் எட்வர்ட்ஸ்!
நேஷனல், 20 ஜூன் 2025: டைனோசர்கள் உலகத்தில் மீண்டும் பயணிக்க தயாராகுங்கள்! யுனிவர்சல் பிக்சர்ஸ் (வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி விநியோகம்) ஜுராசிக் உலகத்தில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அடுத்த அத்தியாயமான ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த் ஜூலை 4, 2025 அன்று இந்தியாவில் வெளியாகிறது. உலகம் முழுவதும் ஜூலை 2 அன்று வெளியாகிறது. மூச்சடைக்க வைக்கும் பிரம்மாண்டமான காட்சிகள் மற்றும் கதைக்களம் என இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இது உள்ளது. எம்மி விருது வென்ற கரேத் எட்வர்ட்ஸ் இயக்கியுள்ள இந்த ஆக்ஷன் அட்வென்ச்சர் படத்தில் அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஸ்கார்லெட் ஜோஹன்சன், எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மற்றும் ஆலிவர் விருது வென்ற ஜொனாதன் பெய்லி, மஹெர்ஷாலா அலி, லூனா பிளேஸ், ரூபர்ட் ஃப்ரெண்ட்எட் ஸ்க்ரீன் மற்றும் டேவிட் லாகோனோ ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் கதை ஜுராசிக் வேர்ல்ட் டொமினியனுக்குப் பிறகு வருகிறது. அங்கு மீதமுள்ள டைனோசர்கள் தனிமைப்படுத்தப்பட்ட அங்கு தன் இனத்தைப் பெருக்கி இருக்கிறது. அந்தச் சூழலில் இருக்கிற மிகப் பிரம்மாண்டமான மூன்று டைனோசர்கள், மனித இனத்துக்கு அதிசயிக்கத்தக்க உயிர்காக்கும் நன்மைகளைக் கொண்டுவரப்போகும் ஒரு மருந்தின் திறவுகோலைக் கொண்டிருக்கின்றன. இதில் நடிகர் ஜொனாதன் பெய்லி தொல்லுயிரியலாளர் டாக்டர் ஹென்றி லூமிஸாகவும் நடிகர் ஸ்கார்லெட் ஜோஹன்சன் திறமையான இரகசிய செயல்பாட்டு நிபுணர் ஜோரா பென்னட்டாகவும் நடித்துள்ளார்கள். அவர் உலகின் மூன்று மிகப் பெரிய டைனோசர்களிடமிருந்து மரபணுப் பொருளைப் பாதுகாப்பதற்கான ஒரு உயர் ரகசிய பணியில் திறமையான குழுவை வழிநடத்துகிறார். இது ஒரு குடும்பத்தை பாதிக்கிறது. அந்த குடும்பம் எதிர்பாராத விதமாக ஒரு தீவில் சிக்கித் தவிக்கிறார்கள். அங்கு அவர்கள் பல தசாப்தங்களாக உலகத்திலிருந்து மறைக்கப்பட்ட ஒரு அதிர்ச்சியூட்டும் கண்டுபிடிப்பை நேருக்கு நேர் சந்திக்கிறார்கள்.
டேவிட் கோப்பின் திரைக்கதை பற்றி இயக்குநர் கேரத் எட்வர்ட்ஸ் பகிர்ந்து கொண்டதாவது, “மிஷன் ஸ்டோரியாகத் தொடங்கும் இது சில காரணங்களால் சர்வைவல் கதையாக மாறுகிறது. இருந்தாலும் அட்வென்சர் மற்றும் எமோஷனல் ஃபேமிலி கதை என இந்த இரண்டையும் சரியாக டேவிட் கையாண்டிருக்கிறார். கடல், நிலம் மற்றும் காற்று என பல விதமான சூழல்களில் இந்தக் கதை பயணிக்கிறது. ஒவ்வொரு சூழலிலும் ஒரு சிறுகதைக்கான பரபரப்பும் எமோஷனும் இருக்கும். இது ஜாஸ் போலவும், மற்ற நேரங்களில் இந்தியானா ஜோன்ஸ் போலவும் இது இரண்டிற்கும் இடையில் டேவிட் அட்டன்பரோ படம் போல இயற்கையை கம்பீரமாகக் காட்டி இருக்கிறது” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இந்த திரைக்கதையைப் படிக்கும்போது ஜுராசிக் பார்க்கில் டைனோசர் தாக்குதல் நடத்துவது போன்ற தீவிரமான சூழல் அமைவதற்கான வாய்ப்பு இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் டேவிட்டின் ஸ்கிரிப்ட் நான் நினைத்ததை விடவும் பல வாய்ப்புகளை வழங்கியதால் நான் உற்சாகமடைந்தேன்” என்றார்.
ஜுராசிக் வேர்ல்ட் – புதிய உலகம் வரும் ஜூலை 4, 2025 அன்று வெளியாகிறது!
Jurassic World: Rebirth | Official Trailer 2
JURASSIC WORLD: REBIRTH | Official Hindi Trailer 2
JURASSIC WORLD: REBIRTH | Official Tamil Trailer 2
JURASSIC WORLD: REBIRTH | Official Telugu Trailer 2