ஆதிமூலம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் KPY பாலா ஹீரோவாக அறிமுகமாகும் ‘காந்தி கண்ணாடி’ திரைப்படத்தை ஷெரிப் இயக்குகிறார்;

ஆதிமூலம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் KPY பாலா ஹீரோவாக அறிமுகமாகும் ‘காந்தி கண்ணாடி’ திரைப்படத்தை ஷெரிப் இயக்குகிறார்;

தமிழ் சினிமாவில் பல முக்கியமான திட்டங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட ஜெய்கிரண், தற்போது தயாரிப்பாளராக தனது முதல் படமான ‘காந்தி கண்ணாடி’ மூலம் புதிய பயணத்தை தொடங்குகிறார்.
ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் இந்த திரைப்படம், எளிமை மற்றும் நேர்மையை பிரதிபலிக்கும் ஒரு அழுத்தமான திரைப்படமாக உருவாகியுள்ளது.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது இப்படக்குழு முழு உற்சாகத்துடன் இறுதி கட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

படத்தின் தயாரிப்பாளர் ஜெய்கிரண் கூறியதாவது,

“காந்தி கண்ணாடி என்பது எங்கள் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக மட்டுமல்ல, எனக்கு மிக மிக நெருக்கமான ஒரு படம். நான் இந்தக் கதையை முதன்முறையாக கேட்டவுடனே என் நெஞ்சை தொட்டது போல் ஒரு உணர்வு இருந்தது. படம் முடிந்த பிறகும், ரசிகர்களின் மனதில் நீண்ட நாட்கள் இருக்கும் ஒரு படமாக இது உருவாகும் என நம்புகிறேன். பாலா, ஷெரீஃப் மற்றும் மற்ற திறமையான கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவுடன் பணியாற்றுவதில் பெருமை கொள்ளுகிறேன். சினிமாவுக்கு மக்களைத் தூண்டும் சக்தி உண்டு – இந்தப் படத்துக்கு அந்தத் தீப்பொறி இருக்கிறது.”

‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான, நகைச்சுவை நேர்த்திக்காக அறியப்படும் KPY பாலா, இப்போதும் ‘காந்தி கண்ணாடி’ படத்தின் மூலம், ஒரு ஆழமான உணர்ச்சி கொண்ட கதாநாயகனாக திரையில் அறிமுகமாகிறார்.

இயக்குநர் ஷெரீஃப், இப்படத்தை இயக்குகிறார். இவரது முந்தய படம் ‘ரணம்: அறம் தவறல்’, விமர்சகர்களின் பாராட்டை பெற்று, ரசிகர்களிடமும் பிரபலமடைந்தது.
இப்போது உண்மைக் கதையிலிருந்து ஈர்க்கப்பட்ட இந்த புதிய படம், ‘ஃபீல்-குட்’ உணர்வுகளை தழுவிய ஒரு உணர்வுப்பூர்வமான குடும்ப திரைப்படமாக உருவாகியுள்ளது.

இயக்குனர் ஷெரிப் கூறியதாவது,

“ரணம் போன்ற ஒரு ஆழமான, எடையுள்ள கதைக்குப் பிறகு, நான் ஒரு நிலையான, மனதிற்கு நெருக்கமான, வாழ்க்கையைப் பற்றிய படத்தை இயக்க விரும்பினேன். ‘காந்தி கண்ணாடி’ எனக்கு மிக நெருக்கமான படம். தயாரிப்பாளர் ஜெய்கிரண், கதையை கேட்டவுடனே ‘ஆம்’ என்ற பதில் சொல்லியது எனக்கு மிக பெரிய உற்சாகத்தை அளித்தது.

இது பாலாவின் ஹீரோவாகும் முக்கியமான படமாகும், மேலும் தேசிய விருது பெற்ற பாலாஜி சக்திவேல் சார் மற்றும் அர்ச்சனா மேடம் போன்ற முக்கிய கலைஞர்கள் இருப்பது, படத்தின் கதைக்கு மேலும் ஆழம் சேர்க்கிறது. இக்குழுவின் உற்சாகம் மற்றும் ஈடுபாடு, நாங்கள் ஒரு உண்மையான, அர்த்தமுள்ள படத்தை உருவாக்குகிறோம் என்பதை எனக்கு நம்பிக்கை அளிக்கிறது.”

நடிகை நமிதா, படத்தின் முக்கிய நாயகியாக நடித்துள்ளார்.
தேசிய விருது பெற்ற இயக்குநர் நடிகர் பாலாஜி சக்திவேல் மற்றும் அர்ச்சனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, படம் உணர்வுபூர்வத்தன்மையால் நிறைந்து இருக்கிறது.

இப்படத்தின் தொழில்நுட்பக் குழு:

இசை: விவேக் மற்றும் மெர்வின் (பட்டாஸ், சுல்தான்)
ஒளிப்பதிவு: பாலாஜி கே. ராஜா
எடிட்டிங்: சிவனந்தீஸ்வர் (தீரன் அதிகாரம் ஒன்று, வடக்குப்பட்டி ராமசாமி)
ஆர்ட் டைரக்ஷன்: மணிமொழியன் ராமதுரை
எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளர் : உதயகுமார் பாலாஜி
தலைப்பு வடிவமைப்பு: தினேஷ் அசோக்
ஆடை வடிவமைப்பாளர்கள்: பிரியா ஹரி மற்றும் பிரியா காரன்
PRO : ரேகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *