
மார்வெல் குடும்பத்தின் மிஸ்டர் ரீட், சூ ஸ்டார்ம் மற்றும் பிறரின் பவர் பற்றி இங்கே பார்க்கலாம்!
மார்வெல் ஸ்டுடியோஸின் ‘ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்’, ஜூலை 25 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. 1960களில், MCU உலகத்தில் ரீட் ரிச்சர்ட்ஸ் மற்றும் அவரது குழுவினரைக் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்த புதிய பயணத்தில் அவர்களின் சக்தி எந்தளவுக்கு ரசிகர்களைக் கட்டிப்போட இருக்கிறது என்பதை இங்கே பார்க்கலாம்.
ரீட் ரிச்சர்ட்ஸ் கதாபாத்திரத்தில் பெட்ரோ பாஸ்கல் (மிஸ்டர் ஃபென்டாஸ்டிக்):
ஃபென்டாஸ்டிக் ஃபோர் குழுவின் தலைவரான ரீட் ரிச்சர்ட்ஸ் தனது உடலை கட்டுக்கோப்பாக மாற்றி கடுமையாக தயாராகி உள்ளார். ரீட் தன் உடலை ரப்பரைப் போல மட்டும் வளைப்பதில்லை. தனக்கேற்றபடி இருக்கும் இடத்தையும் வடிவமைத்துக் கொள்பவர். அவரது சூப்பர்ஹுமன் அறிவுத்திறனுடன் இணைந்து, MCU-ல் மிகவும் வலிமையான அறிவியலாளர். அவரது அசாத்தியங்களை திரையில் காணத் தயாராகுங்கள்!
சூ ஸ்டோர்ம் கதாபாத்திரத்தில் வனேசா கிர்பி (இன்விசிபிள் வுமன்):
பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்படும் சூ ஸ்டோர்ம், குழுவில் தந்திரமானவர். அவர் தன்னையும் மற்றவர்களையும் கண்ணுக்குத் தெரியாதவர்களாக மாற்ற முடியும். ஆனால் அவரது உண்மையான பலம் ஏவுகணைகள் முதல் வலிமையான தாக்குதல்களைத் தடுக்கும் அளவுக்கு சக்திவாய்ந்த சியோனிக் ஃபோர்ஸ் ஃபீல்ட்களை உருவாக்குவதில் உள்ளது. சூ இரண்டாம் நிலை கதாபாத்திரமாக மட்டுமல்லாது இந்த உலகத்தில் குழுவில் வலிமையான ஒருவராகவும் வருகிறார்.
ஜானி ஸ்டார்ம் கதாபாத்திரத்தில் ஜோசப் க்வின் (ஹியூமன் டார்ச்):
குழுவின் முக்கிய நபரான ஜானி ஸ்டார்ம், தற்போது வலுவான பைரோகினேசிஸுடன் திரும்புகிறார். தீப்பிழம்புகளுடன் ஒளிர்வது, ஒலி வேகத்தில் பறப்பது மட்டுமல்லாது நெருப்புகளை உள்வாங்கி திருப்பியும் விட முடியும். நெருப்பின் மீதான அவரது கட்டுப்பாடு இப்போது ஆயுதமாகியுள்ளது. இந்தத் திறன் பூமிக்கு அப்பாற்பட்ட போர்களில் அவரை அச்சுறுத்தலாக மாற்றியுள்ளது.
பென் கிரிம் கதாபாத்திரத்தில் எபோன் மோஸ்-பக்ராச் (தி திங்):
குழுவில் அதிகம் உணர்ச்சி வயப்பட்ட நபர் பென் கிரிம். அவர் பார்ப்பதற்கு கரடுமுரடாக இருந்தாலும் மனதளவில் மென்மையானவர். அவர் அபரிமிதமான உடல் வலிமையுடனும் இருக்கிறார். போரில் முதலில் இறங்கியது அவர்தான். ஆனால் கடைசியாக தனது மனிதநேயத்தை விட்டுக்கொடுத்தவர் அவர்தான். பென்னின் ஆழ்மன போராட்டத்திற்கு அதிக கவனம் செலுத்தி, அதிகாரத்துடன் பரிதாபத்தை காட்டியுள்ளது.
பிராங்க்ளின் ரிச்சர்ட்ஸ்:
டீஸ் செய்தாலும் டிரெய்லரில் சூ மற்றும் ரீட்டின் மகன் பிராங்க்ளின் ரிச்சர்ட்ஸ் என்ற ஹிண்ட் உள்ளது. காங் மற்றும் ஸ்கார்லெட் விட்ச் போன்றவர்களுக்கு போட்டியாக காமிக்ஸில் யதார்த்தத்தை குலைக்கும் ஒரு கதாபாத்திரம். ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸில் அவர் முக்கிய பங்கு வகிக்காவிட்டாலும், அவரது இருப்பு எதிர்கால காஸ்மிக் லெவலுக்கு உதவும்.
‘தி ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்’ ஜூலை 25, 2025 அன்று இந்திய திரையரங்குகளில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.