
தஞ்சை மாவட்டம் ஆர்சுத்திப்பட்டு கிராமத்தை பிறப்பிடமாகவும், நெய்வாசல் சமத்துவப்புரம் கிராமத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருப்பவர் இரா. லாவரதன்.இவர் 2016 ல் தஞ்சை பாரத் கல்லூரியில் எம்.எஸ்.சி கண்ணி அறிவியல் படிப்பை முடித்துவிட்டு தமிழ்த் திரைப்பட பாடலாசிரியராக வேண்டும் என்ற நம்பிக்கையில் சென்னை வந்தார்.ஆனால் அவரது நம்பிக்கை நிறைவேறவில்லை.அதற்கு பதிலாக சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ தமிழ் பயின்றார்.பின் ஓரு தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்தப்படி பாடல் எழுத வாய்ப்பும் தேடி வந்தார்.அப்பொழுது இசையமைப்பாளர் C.சத்யாவின் அறிமுகம் கிடைக்க , பிரபுதேவா நடிப்பில் வெளிவந்த தேள் படத்தின் மூலம் பாடலாசிரியராய் அறிமுகமானார்.அதன் பின்னர் தபங்3 (தமிழ்), யங் மங் சங்,கோல்டு (தமிழ்) அயோத்தி,சூதுகவ்வும்2 , இடிமுழக்கம்,கேங்கர்ஸ்,அக்கரன்,நிண்ணு விளையாடு,அம்புநாடு ஒம்பது குப்பம் தற்போது விஜய் ஆண்டனி நடிப்பு இசையில் வெளிவந்து வெற்றிநடைப் போடும் மார்கன் படம் போன்ற 25 க்கும் மேற்பட்ட படங்களுக்கும், சாந்தனு நடிப்பில் ஏ புள்ள ,ஹர்சவர்தன் ,சிவாங்கி நடிப்பில் லா லா ஹார்ட்டு நிக்காலா, அம்மு அபிராமி நடிப்பில் போகாதே,மற்றும் பிண்ணனி பாடகர்கள் மனோ அந்தோனிதாசன் இசையில் பல தனிப்பாடல்கள் என இன்று தமிழ் திரை உலகில் தனக்கென்று ஒர் அடையாளத்தைப்பெற்றுள்ளார் பாடலாசிரியர் இரா.லாவரதன்.