”’ஓஹோ எந்தன் பேபி’ திரைப்படம் எனது கனவு” நடிகர் ருத்ரா!

”’ஓஹோ எந்தன் பேபி’ திரைப்படம் எனது கனவு” நடிகர் ருத்ரா!

ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் பெருமையுடன் தயாரித்து வழங்கும் ரொமாண்டிக் எண்டர்டெய்னர் திரைப்படம் ‘ஓஹோ எந்தன் பேபி’ இன் அசோசியேஷன் வித் குட் ஷோ. இந்தப் படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கி இருக்க நடிகர்- தயாரிப்பாளர் விஷ்ணு விஷாலின் இளைய சகோதரர் ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகிறார். படம் ஜூலை 11 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

படம் குறித்து நடிகர் ருத்ரா பகிர்ந்து கொண்டதாவது, “என்னுடைய அண்ணன் விஷ்ணு விஷால் என்னை ஹீரோவாக அறிமுகம் செய்வதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். சினிமா தான் என்னுடைய முதல் நண்பன். உதவி இயக்குநராக இருந்து பின்பு நடிகராகலாம் என்றுதான் சினிமா பயணத்தைத் துவங்கினேன். இந்த படம் எவ்வளவு முக்கியம் என்பது எனக்கு தெரியும். நான் நன்றாக நடித்து இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் இயக்குநர் கிருஷ்ணா தான். நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர் எல்லோரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். ஜென் மார்ட்டின் இசை மிகவும் பிடிக்கும். என்னுடைய குடும்பம், நண்பர்களுக்கு நன்றி. என்னுடைய அண்ணனுக்கு ஸ்பெஷல் நன்றி! அவரிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். படம் பார்த்து விட்டு சொல்லுங்கள்” என்றார்.

நடிகர்கள்: ருத்ரா, மிதிலா பால்கர், அஞ்சு குரியன், மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி, கருணாகரன், கீதா கைலாசம், பாலாஜி சக்திவேல் மற்றும் பலர்.

தொழில்நுட்பக் குழு:
வழங்குபவர்கள்: விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ்,
இயக்குநர்: கிருஷ்ணகுமார் ராமகுமார்,
தயாரிப்பாளர்கள்: ராகுல் மற்றும் விஷ்ணு விஷால்,
இணை தயாரிப்பாளர்கள்: கே.வி.துரை மற்றும் ஜாவித்,
இணை தயாரிப்பு: குட் ஷோ,
இசை: ஜென் மார்ட்டின்,
ஒளிப்பதிவு: ஹரிஷ் கண்ணன்,
எடிட்டர்: ஆர்.சி. பிரணவ்,
கலை இயக்குநர்: ராஜேஷ்,
ஸ்டண்ட் மாஸ்டர்: ரக்கர் ராம்,
நடன இயக்குநர்கள்: பாபி, சதீஷ் கிருஷ்ணன்,
கதை: முகேஷ் மஞ்சுநாத்,
ஆடை வடிவமைப்பு: ருச்சி முனோத்,
காஸ்ட்யூமர்: ரவி,
ஒப்பனை: சக்திவேல்,
பாடல் வரிகள்: அஹிக் ஏஆர், கார்த்திக் நேதா, வேணு செல்வன், ரைசிங் ராப்பர்,
ஒலி வடிவமைப்பு: சிங்க் சினிமா,
ஒலிக்கலவை: அரவிந்த் மேனன்,
ஒலி பொறியாளர்: தீலபன், ஸ்ரீராம் (சீட் ஸ்டுடியோஸ்),
VFX: Resol FX,
DI: மேங்கோ போஸ்ட்,
வண்ணம்: கே. அருண் சங்கமேஸ்வர்,
ஸ்டில்ஸ்: நரேன்,
பப்ளிசிட்டி ஸ்டில்ஸ் : வி.எஸ்.அனந்தகிருஷ்ணன்,
பப்ளிசிட்டி டிசைனர்: கோபி பிரசன்னா,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா- அப்துல் நாசர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *