
சமஸ்கிருத்தில் திரைப்படம்
இயக்க போகிறேன்…
நடிகர் மன்சூர் அலிகான்!
“அகம் பிரம்மாஸ்மி” ஆல்பம் அதற்கு முன்னோட்டமாக எடுத்துள்ளேன்.
சமஸ்கிருத மந்திரங்கள், ஸ்லோகங்கள் பயன்படுத்தி ‘அகம் பிரம்மாஸ்மி’ என்ற ஆல்ப பாடலை எழுதி, இசையமைத்து, பாடியுள்ளார் நடிகர் மன்சூர் அலிகான்!
‘ராஜாதி ராஜ ராஜ குலத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன்’ படத்தில் பாடல்கள், இசை, நான் அமைத்திருந்தேன். வாணி ஜெயராம், சந்திரபோஸ், சொர்ணலதா, டி.எஸ்.ராகவேந்தர் ஆகியோரை பாட வைத்திருந்தேன். சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி ஆகியோருடன் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தேன். ‘டிப் டாப் தமிழா’ ஆல்பம் இசையமைத்து வெளியிட்டேன்.
தமிழ் என் தாய் மொழி. மூத்த மொழி, தொன்மையான மொழி. கலைஞனுக்கு மொழி, இனம், நாடு வித்யாசம் கிடையாது. அந்த வகையில் சமஸ்கிருதத்தில் ஜதி பிடித்திருந்தது. பரதநாட்டியம், குச்சிப்புடி நடன அசைவுகளுக்கும், சிவ தாண்டவம் ஆடவும் சமஸ்கிருதம் பொருத்தமாக இருந்தது. அதனால் ‘அகம் பிரம்மாஸ்மி’ இந்த ஆல்பத்தில் சமஸ்கிருதம் பயன்படுத்தி உள்ளேன். ஆல்பத்தின் டிரைலர் வெளியிட்டுள்ளேன். விரைவில் முழு ஆல்பம் வெளிவரும்.
முன்னணி நடிகர்களை வைத்து, முழுக்கமுழுக்க சமஸ்கிருதத்திலேயே ஒரு படத்தை விரைவில் இயக்க உள்ளேன். அந்தப் படம் பான் இந்திய படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழி சப் டைட்டிலில் வெளிவரும் என்கிறார் மன்சூர் அலிகான்!
@GovindarajPro