
“நலன் குமாரசாமிக்கு அடுத்ததாக ஒரு வலுவான கதாசிரியராக ராகவை பார்க்கிறேன்” ; பன் பட்டர் ஜாம் இயக்குநர் குறித்து இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா
இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா பேசும்போது,
“தயாரிப்பாளர் சுரேஷ் என்னுடைய நண்பர் தான். அவர்தான் ராஜுடன் இணைந்து இந்த படத்தை பண்ணலாம் என ஒரு ஐடியாவை கொண்டு வந்தார். ராகவ் மிர்தத் அற்புதமான பணியை செய்துள்ளார். இந்த படத்தின் பிஈமியரை நேற்று பார்த்தபோது முழு திருப்தியாக உணர்ந்தேன். நலன் குமாரசாமிக்கு அடுத்ததாக ஒரு வலுவான கதாசிரியராக ராகவை பார்க்கிறேன். அவரது அடுத்தடுத்த படங்களில் இன்னும் அதிகம் எதிர்பார்க்கிறேன். ராஜுவை திரையில் பார்த்ததுமே அவரை அழைத்து நீங்கள் பெரிய ஆளாக வருவீர்கள் என கூறினேன். அவர் நேற்று வரை நம்பவில்லை. இன்று மற்றவர்கள் பேசிய பிறகுதான் நம்பியுள்ளார். இந்த படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பெற்றுள்ளன. முதன்முதலாக விஜய்சேதுபதி அண்ணா இரண்டு பாடல்களை எழுதி ஒரு பாடலாசிரியராக அறிமுகமாகியுள்ளார். கார்த்திக் நேத்தா, சரஸ்வதி மேனன், எம்கே பாலாஜி மற்ற பாடல்களை எழுதியுள்ளார்கள்” என்று கூறினார்.