“இப்போதைய தலைமுறை பற்றிய ஒரு பெருமைக்குரிய சினிமா”. ; ‘பன் பட்டர் ஜாம்’ படம் குறித்து நடிகர் சார்லி புகழாரம்

“இப்போதைய தலைமுறை பற்றிய ஒரு பெருமைக்குரிய சினிமா”. ; ‘பன் பட்டர் ஜாம்’ படம் குறித்து நடிகர் சார்லி புகழாரம்

நடிகர் சார்லி பேசும்போது,

“இந்த படத்தின் கதை என்னிடம் வந்த போது அதைக் கேட்டுவிட்டு இது எனக்கு வேண்டாம்.. நான் செய்தால் சரியாக இருக்காது.. எனக்கு இதில் ஸ்பேஸ் அவ்வளவாக இல்லை எனக்கூறி நழுவ முயற்சித்தேன். ஆனால் இயக்குநர் ராகவ் வந்து இந்த படத்தின் முழு கதையையும் என்னிடம் சொன்ன பிறகு எந்த காலத்திலும் இந்த படத்தை மிஸ் பண்ண கூடாது என்று அவரிடம் கூறினேன். தமிழ் சினிமாவையே வேறொரு தளத்திற்கு எடுத்துச் செல்லக்கூடிய ஒரு புதிய முயற்சிதான் பன் பட்டர் ஜாம். இதில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் வந்து செல்லும் நடிகர் கூட அங்கீகரிக்கப்படுவார். அந்த அளவிற்கு அனைத்து மொழிகளுக்கும் பொருந்தக்கூடிய ஒரு கதை அம்சம் கொண்ட படம் இது. இப்போதைய தலைமுறை பற்றிய ஒரு பெருமைக்குரிய சினிமா.

இயக்குநர் இந்த கதையை சொன்ன போது உங்களுக்கு முழுவதும் புரிந்ததா என்று இந்த படத்தின் எடிட்டர் ஜான் ஆபிரகாமிடம் கேட்டேன். ஏனென்றால் இது எனக்கு அப்படித்தான் இருந்தது. ஆனால் ஆரம்பத்தில் எதுவுமே முழுதாக புரிந்துவிடாது. கதைக்குள் போக போகத்தான் அவர் சொல்ல வந்திருக்கும் விஷயம், ஆஹா என்று சொல்ல வைக்கும் விதமாக இருக்கிறது. நேற்று தான் இந்த படத்தை நான் பார்த்தேன். திரும்பத் திரும்ப பார்க்க தூண்டக்கூடிய ஒரு அற்புதமான படைப்பாக இந்த படம் வந்திருக்கிறது.

ரீல்ஸ் போடும் பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பவ்யா நிச்சயமாக தமிழ் சினிமாவின் மாஸ் ஆக வரப்போகிறார். அதேபோல ஆத்யாவும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். இது போன்ற இளைஞர்களுடன் நடிக்கும்போது என்னை நானே புதுப்பித்துக் கொள்ள முடிகிறது. ஈகோ இல்லாத ஒரு மனிதரால் தான் வாழ்க்கையின் உச்சத்திற்கு செல்ல முடியும். நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் ராஜுவை நான் அப்படி பார்க்கிறேன்.. இன்றைய தலைமுறை மட்டுமல்ல எல்லா தலைமுறையும் கொண்டாட கூடிய படமாக இது உருவாகி உள்ளது” என்றார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *