
’தேசிங்குராஜா 2’
இயக்கம் – எழில்
நடிகர்கள் – விமல், ஜனா , பூஜிதா பொன்னாடா , ஹரிஷிதா, ஆர் வி உதயகுமார்
இசை – வித்யாசாகர்
தயாரிப்பு – டிரினிட்டி கிரியேஷன் – ரவிச்சந்திரன்
ஒரு ஊரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் குற்றவாளிகளுக்கு துணை நிற்பது, லஞ்சம் வாங்குவது, காவல் நிலையம் இருக்கும் இடத்திற்கு வாடகை கொடுக்காமல் ஏமாற்றுவது என பல மோசடி வேலைகளை செய்து காவல்துறையின் கலங்கமாக இருக்கிறார். அவரது ரவுடி நண்பர், அமைச்சர் மகனை கொலை செய்வதாக சவால் விடுகிறார். மேலும் அந்த இன்ஸ்பெக்டரின் கல்லூரி தோழி போலீஸ் உதவி கமிஷ்னராக வருகிறார். அமைச்சர் மகனை பாதுகாக்கும் பொறுப்பு அந்த பெண்ணிடம் ஒப்படைக்கப்படுகிறது. அமைச்சர் மகனுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்கிறார்கள். ஆனால், அந்த பாதுகாப்பையும் மீறி சொன்னது போல் அந்த ரவுடி கொலை செய்கிறார். அமைச்சர் மகனை கொலை செய்ய காரணம் என்ன?, பாதுகாப்பு அளிக்கும் போலீஸ் அதிகாரிக்கு இதில் தொடர்பு இருக்கிறதா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
இந்தப் படத்தில் விமல் ஒரு போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார் , இதற்கு முன் அவர் போலீசாக நடித்த சீரிஸ் மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது, ஆனால் இந்த படத்தில் ஒரு நகைச்சுவை போலீசாக தான் காட்சியளிக்கிறார்,
மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் ஜனா, நடனம், ஆக்ஷன் என அனைத்தும் தனக்கு தெரியும் என்பதை நிரூபித்திருக்கிறார். பூஜிதா பொன்னடா, ஹர்ஷிதா பண்ட்லமூரி, ஜூகி என மூன்று பேர் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். மூவருக்கும் தலா ஒரு பாடல், சில காட்சிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. மூவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
அமைச்சராக நடித்திருக்கும் ரவி மரியா, முதலமைச்சராக நடித்திருக்கும் ஆர்.வி.உதயகுமார், சிங்கம்புலி, லொள்ளு சபா சுவாமிநாதன், கேபிஒய் வினோத், மதுரை முத்து என படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருந்தாலும், ஜொலிக்கவில்லை.
இசையமைப்பாளர் விதயாசாகரின் இசை, ஒளிப்பதிவாளர் செல்வா.ஆர்-ன் ஒளிப்பதிவு, என அனைத்தும் படத்திற்கு பலமாக இருக்கிறது.
இந்தப் படத்தை எழுதி இயக்கியிருக்கும் எழில், ஒரு பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்து ஒரு நகைச்சுவையான படத்தை எடுக்க முயற்சி செய்துள்ளார், நகைச்சுவை படங்களில் லாஜிக் பார்க்க கூடாது, என்று சொல்வார்கள். அப்படி லாஜிக் மறந்து பார்த்தாள் நம்மை கண்டிப்பாக சிரிக்க வைக்கும்
மொத்தத்தில், இந்த ‘தேசிங்குராஜா 2’ நகைச்சுவை கலாட்டா.
.
Rating 3/5