ஸ்டண்ட் கலைஞர் உயிரிழப்புக்குநடிகர் தக்‌ஷன் விஜய் இரங்கல்!

ஸ்டண்ட் கலைஞர் உயிரிழப்புக்கு
நடிகர் தக்‌ஷன் விஜய் இரங்கல்!

200’க்கும் மேற்பட்ட கார், பைக் போன்ற வாகனங்களை ஓட்டி பாதுகாப்பாக ஜம்ப் செய்த ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் அவர்கள், எதிர்பாராத விதமாக படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்தது வேதனைக்குரியது!

பா. ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ படப்பிடிப்பில், கார் ஜம்பிங் செய்தபோது விபத்தில் உயிரிழந்த ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் அவர்களுக்கு, நடிகர் தக்‌ஷன் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்!

தான் நடித்த ‘கபளிஹரம்’ ‘ஐ அம் வெயிட்டிங்’ மற்றும் மலையாளத்தில் ‘இத்திகர கொம்பன்’, ‘சொப்பனங்கள் விற்குந்த சந்திரநகர்’ படங்களில், ஸ்டண்ட் கலைஞர்கள் உயிரை பணயம் வைத்து வேலை செய்வதை கண்கூடாக பார்த்திருக்கிறேன். அவர்களின் பாதுகாப்பை வரும் காலங்களில் மேலும் அதிகரிக்க கோரிக்கை வைக்கிறேன்.

மறைந்த ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் குடும்பம் இயல்பு நிலைக்கு திரும்பி வர ஆண்டவரை பிரார்த்திக்கிறேன்!

அடுத்து நான் தயாரிக்கவுள்ள படங்களில் ஒரு தயாரிப்பாளராக, ஸ்டண்ட் கலைஞர்களுக்கு என்னாலான அதிகபட்ச பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுப்பேன் என நடிகர் தக்‌ஷன் விஜய் தெரிவித்தார்!

@GovindarajPro

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *