
ஹாரர் மற்றும் திரில்லர் காட்சிகளில் மிரட்டும் ஜென்ம நட்சத்திரம் திரைப்படம்..!
ஹாரர் மற்றும் திரில்லர் காட்சிகளுடன் வெளியான ஜென்ம நட்சத்திரம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் ஜூலை 18ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜென்ம நட்சத்திரம். ஹாரர் மற்றும் திரில்லர் கதை களத்தில் வெளியாகி உள்ளது. கதாநாயகனாக தமன் அக்ஷான் மற்றும் கதாநாயகியாக மால்வி மாலோத்ரா இருவரும் இந்த கதைக்கேற்ற ஆற்றல் மற்றும் தீவிரத்தை மிகச் சிறப்பாக திரையில் கொண்டு வந்துள்ளனர்.
இயக்குனர் மணிவர்மன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் , காளி வெங்கட், முனீஸ்காந்த், தலைவாசல் விஜய், வேல ராமமூர்த்தி,சந்தான பாரதி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் சஞ்சய் மாணிக்கம் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு குரு சூர்யா எடிட்டிங் செய்துள்ளார்.
இந்தப் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் ரசித்து விரும்பிப் பார்க்கும் கதைக்களமாக இந்த திரைப்படம் இருந்து திரையரங்குகளில் இந்த படத்தை கொண்டாடி வரும் நிலையில் நீங்களும் குடும்பத்துடன் சென்று இந்த திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்து வார இறுதி நாளை கொண்டாடுங்கள்.
இது மட்டும் இல்லாமல் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குழந்தைகள் மற்றும் பெண்களுக்காக இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது கலரும் இந்தப் படத்தை பார்த்து விட்டு கண்ணீருடன் வெளியில் வந்துள்ளனர். அவர்களின் பாராட்டை படக்குழுவினருக்கு தெரிவித்துள்ளனர்.