
‘#மக்கள்தொடர்பாளன்’ என்ற பெயரில் புதிய படம் மற்றும் டீசர் வெளீட்டு விழா !!!
‘ தயாராகி உள்ளது. இதில் நாயகனாக #விண்ஸ்டார்விஜய் மற்றும் மும்பை மாடல் அழகி சைத்ரா, பெங்க ளூருரை சேர்ந்த ரீனா உள்பட பதினெட்டு புதுமுகங்கள் நடிக்கின்றனர். சம்பத் முக்கிய கதாபாத்திரத்தில் வருகி றார்.
சிறுவயதிலேயே சினிமா மீது ஆர்வம் உள்ள இளைஞன் தொடர்ந்து திரைப்படங்கள் பார்ப்பது, மேடையில் நடிப்பது என்று இருக்கிறான். வேலை செய்யாமல் ஊர் சுற்றுவது, தாயம் விளையாடுவது, அத்தை பெண்களுடன் சுற்றுவது என்று பொழுதை கழிக்கிறான்.
அவன் சினிமாவில் நடிக்க எடுத்த முயற்சி என்ன? அதில் வெற்றி பெற்றானா? என்பது கதை. இந்த படத்தை எச்.முரு கன் கிரீன் சேனல் மூவீஸ் தயாரிக்கிறது. மும்பை, பெங்க ளூரு, திருச்சி, மதுரை, ஏற்காடு, கரூர், சென்னையில் படப் பிடிப்பு நடத்தி வருகின்றனர்.
இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி எச். முருகன் டைரக்டு செய்கிறார். இசை: சந்தோஷ் ராம், ஒளிப் பதிவு: மணிகண்டன், அகரன்.