
சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்
கொலை, குருதி, … Chennai-யில் ஒரு பரபரப்பான பக்கத்தைத் திறக்கிறது!
கிரைம் நாவல் எழுத்தாளரின் மகனான வெற்றி, தந்தையின் வாழ்க்கை கதையை தொடராக எழுத சென்னை வருகிறார். அங்கே போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கும் தம்பி ராமையாவுடன் நட்பு ஏற்படுகிறது. வெற்றியின் கூர்மையான துப்பறியும் திறமையால் ஈர்க்கப்பட்ட ராமையா, அவரை தனது விசாரணைகளில் துணையாக அழைத்துக் கொள்கிறார்.
அந்த நேரத்தில், ஒரு பெண் நிருபரும் சில பள்ளி மாணவர்களும் ஒரே மாதிரி கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள். இந்த கொடூரக் குற்றங்களின் பின்னணியை தேடி செல்லும் வெற்றி – அந்தப் பாதையில் அவனைச் சந்திக்கும் திருப்பங்கள், அபாயங்கள், அதிர்ச்சிகள்… இதுவே சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்.
🎭 கதாநாயகன்..
வெற்றி – கிரைம்–சஸ்பென்ஸ் ஜானரில் பழக்கப்பட்ட முகம் என்றாலும், இம்முறை அவர் கொண்டுவந்த நுணுக்கங்கள் படத்தை மெருகேற்றுகின்றன. விசாரணை காட்சிகளிலும் நடனமும், ஜாலியான பேச்சும், காமெடி டச்சும் – எல்லாம் சமநிலையோடு. ஒரே மாதிரி நடிப்பு குற்றச்சாட்டை முற்றிலும் தகர்த்துவிட்டார்.
கதாநாயகி..சில்பா மஞ்சுநாத்து – நிருபர் கதாபாத்திரத்தில் பொருத்தமாக இருக்கிறது. காதல், பாடல் இல்லாமலேயே பாத்திரத்தை இயல்பாகக் கையாள்ந்திருக்கிறார்.
தம்பி ராமையா – போலீஸ் இன்ஸ்பெக்டராக காமெடியிலும், குணச்சித்திரத்திலும் இரண்டிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்,நகைச்சுவை கலந்த உரையாடல்கள், காட்சிகளுக்கு உயிரூட்டுகின்றன.
மகேஷ் தாஸ் – வில்லனாக அறிமுகமாகியும், திரையில் சக்தி மிக்க பிரசன்னத்தை வெளிப்படுத்தியுள்ளார். குறைவான உரையாடல்களிலேயே உடல்மொழியால் பயமுறுத்தியுள்ளார்.
ரெடின் கிங்ஸ்லி – சில சுவாரஸ்யமான தருணங்களில் நகைச்சுவை மூலம் கதையின் சீரியஸ்நஸை உடைத்து, பார்வையாளர்களுக்கு சிறு ரிலீஃப் தருகிறார்.
🎬 தொழில்நுட்ப பக்கம்
இசை (A.J.R) – BGM பரபரப்பை இரட்டிப்பாக்குகிறது. குறிப்பாக சஸ்பென்ஸ் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளில் இசை ஒரு தனி கதாபாத்திரமாக செயல்படுகிறது.
ஒளிப்பதிவு (அரவிந்த்) – சென்னை நகரின் இருண்ட மூலைகளையும், பரபரப்பான chase காட்சிகளையும் அழகாகப் பிடித்துள்ளார்.
எடிட்டிங் (விஷால்) – வேகமான எடிட்டிங், படம் முழுவதும் audience-ஐ எங்கேயும் சோர்வடைய விடாமல் இழுத்துச் செல்கிறது.
🎥 இயக்கம்
அனிஷ் அஷ்ரப் – சைக்கோ திரில்லர் ஜானரை, சமூக பிரச்சினையுடன் (பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கடுமையான தண்டனை அவசியம்) , என்பதையும் ட். திரைக்கதை தளர்ச்சி இல்லாமல் நகரும் விதம் பாராட்டத்தக்கது. ஒவ்வொரு காட்சியிலும் suspense-ஐ தக்க வைத்திருக்கும் அவரது கட்டுப்பாடு, இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம்.
சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம் –
பார்வையாளர்களை கடைசி வரை உசுப்பேற்றி, “இப்போ என்ன ஆகும்?” என்ற கேள்வியில் வைத்து, சஸ்பென்ஸ்-ஐ கலைத்து, ஒரு திருப்தியான முடிவைத் தரும், வேகமான, பரபரப்பான திரில்லர்.
ரேட்டிங்: 3.3/5 – கிரைம் திரில்லர் ரசிகர்களுக்கு தவறாமல் பார்க்க வேண்டிய படம்!