வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சாம்பியன்பிஃடே( Fide -பன்னாட்டு‌ சதுரங்கக் கூட்டமைப்பு) உலக பள்ளிகள் அணி சாம்பியன்ஷிப் 2025எபிஸ்கோபல் உயர்நிலைப்பள்ளி, வாஷிங்டன் டி.சி.வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சாம்பியன்

*செய்திக்குறிப்பு வெளியிடுபவர்: வேலம்மாள்‌ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி & வேலம்மாள் செஸ் அகாடமி
நாள்: 07.08.25 – 4வது நாள்

வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சாம்பியன்
பிஃடே( Fide -பன்னாட்டு‌ சதுரங்கக் கூட்டமைப்பு) உலக பள்ளிகள் அணி சாம்பியன்ஷிப் 2025
எபிஸ்கோபல் உயர்நிலைப்பள்ளி, வாஷிங்டன் டி.சி.
வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சாம்பியன்

பிஃடே உலக பள்ளிகள் அணி சாம்பியன்ஷிப் 2025 போட்டி அமெரிக்காவின்‌ வாஷிங்டன் நகரில் ஆகஸ்ட் 02 முதல்‌ 07வரை நடைபெற்றது.

இந்தப் போட்டியில் பங்கு பெறுவதற்காக இந்தியாவிலிருந்து முதன் முறையாக தமிழ்நாட்டின் வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி‌ வீரர்கள் அமெரிக்கா சென்றனர்..

இப்பள்ளியின்‌ சார்பாக பள்ளியின் பயிற்சியாளர்‌- அணித்தலைவர் எஸ்.வேலவன்‌ தலைமையில் வீரர்கள் கீர்த்தி‌ ஶ்ரீ ரெட்டி(WFM), அஸ்வத்.எஸ்(IM), தக்ஷின்அருண்(FM), இளம்பரிதி(IM) எ.ஆர், பிரனவ் கே.பி(FM) பங்கேற்றார்கள்.

மொத்தம் எட்டு சுற்று. தொடர்ச்சியாக எட்டு சுற்றின் முறையே மங்கோலியா, ஹங்கேரி,ஆஸ்திரியா, அமெரிக்க, கஜகிஸ்தான், இலங்கை, உஸ்பெகிஸ் தான் நாட்டு‌ப் பள்ளியை‌ எதிர்கொண்டு எட்டு சுற்றிலும் தோல்வி யடையாமல் வெற்றி பெற்றனர்.

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள எபிஸ்கோபல் உயர்நிலைப் பள்ளியில் நடைபெறும் இந்த நிகழ்வில் 250க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து 55 நாட்டின்‌ சிறந்த பள்ளிகள் அணி கலந்து கொண்டது.

வீரர்கள் ஐவரும் மற்றும் அணித்தலைவர் த எஸ்.வேலாயுதம் நாட்டிற்கும் மாநிலத்திற்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *