
சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்து
அன்புள்ள சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு,
அபூர்வ ராகத்தில் அறிமுகமான அதிசய ராகம்! அறிமுகத்திலிருந்து இன்று வரை ஏறுமுகமே உங்களது பயணம்! ஆரம்ப காலகட்டத்தில் உங்களுக்கு குழந்தைகள் ரசிகர்களாக இருந்தது அதிசயம் அல்ல, உங்களது கலைப்பயணத்தில் ஐம்பதாவது வருடத்தில் தொட்டும் இன்றும் உங்களுக்கு குழந்தைகள் ரசிகர்களாக இருப்பது அதிசயத்திலும் அதிசயம்!
திரையுலகில் சூப்பர் ஸ்டார் என்பது உங்களுக்கு வழங்கிய பட்டம் அல்ல அது உங்களுக்கு வழங்கப்பட்ட ‘பட்டா’. தமிழ்த் திரை உலகில் பல விமர்சனங்களை தாங்கி, பல தடைகளைத் தாண்டி உயர்ந்து நின்று மிளிரும் உச்ச நட்சத்திரம் நீங்கள் மட்டுமே!
வயது எழுபதைத் தாண்டியும் உச்சத்தில் இருந்து பெரும் ரசிகர் படையை கொண்டிருக்கும் உலகின் புதிய அதிசயம் நீங்கள்தான்.
இயக்குனர்கள் எவ்வளவு இளையவர்களாக இருந்தாலும் இயக்குனருக்கான மரியாதை அவர்களுக்கு இன்றளவும் கொடுத்து வரும் ஒரு உன்னத நாயகன் நீங்கள் தானே..
கலைத்தாய் ஈன்றெடுத்து இன்று 50 ஆண்டுகளை தொட்டு விட்டீர்கள்! திரைத்துறையில் உங்களுக்கு இது பொன்விழா ஆண்டு, ஆனால் திரைத்துறைக்கு இது பொற்கால ஆண்டு!
தங்களின் கூலி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்து திரைத்துறையில் தாங்கள் ஐம்பதை மட்டுமல்ல நூறையும் தாண்டி உங்களின் பேரும் புகழும் மேலும் மேலும் நிலைத்திருக்க எங்களது தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.