பிஸ்கான்’25 – சிடிஎம்ஏ தொடக்க விழா தொழில்முனைவோருக்கு புதிய உந்துதல், புதுமை மற்றும் நவீன சிந்தனைகள்

பிஸ்கான்’25 – சிடிஎம்ஏ தொடக்க விழா தொழில்முனைவோருக்கு புதிய உந்துதல், புதுமை மற்றும் நவீன சிந்தனைகள்

சென்னை, ஆகஸ்ட் 21, 2025 – திரு. வி.சி. பிரவீன் தலைமையில் கான்ஃபெடரேஷன் ஆஃப் மலையாளம் அசோசியேஷன்ஸ் (CTMA) அமைப்பு, பிஸ்கான்’25 எனும் தொழில்முனைவு மாநாட்டை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள Hyatt ரீஜென்ஸி ஹோட்டலில் வெற்றிகரமாக தொடங்கினார்கள். தொழில்முனைவோர், சிந்தனையாளர்கள் மற்றும் தொழில் நுட்ப நிபுணர்களை ஒருங்கிணைக்கும் தனித்துவமான தளமாக இந்த மாநாடு அமைந்தது.

விழா என்எல்சி இந்தியா லிமிடெட் தலைவர் திரு. பிரசன்னா குமார் மோடுபள்ளி மற்றும் ஏ.வி. அனூப் (அவா குழுமத்தின் தலைவர்) ஆகியோரின் கைத்தூவிளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைத்தார்கள். அவர்களின் பங்கேற்பு, மற்றும் சிந்தனைகள் தொழில்முனைவு மேம்பாடு, வணிக முன்னேற்றம் மற்றும் புதுமையான யோசனைகளுக்கான வலுவான அடித்தளத்தை உருவாக்கும் விதமாக அமைந்தது.

பிஸ்கான்’25 மாநாட்டில் முன்னணி தொழில்முனைவோர்கள் மற்றும் தலைசிறந்த நிபுணர்கள் பங்கேற்றனர். அவர்களில் naturals சி.கே. குமாரவேல், byjus அர்ஜுன் மோகன், ராதிகா சரத்குமார் (ரதான் நெட்வொர்க்ஸ்), டாக்டர் ஸ்ரீமதி கேசன் (ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா), Toy forest சிந்து ஆகஸ்டின், போபி செம்மனூர், சஞ்சய் கே ராய், டாக்டர் கே. அன்சாரி, கோபிநாத் முதுகாடு, பி. விஜயன் ஐபிஎஸ் (ADGP), சுமேஷ் கோவிந்த், சுரேஷ் பத்மநாபன், முருகவேல் ஜனாகிராமன், சி. சிவசங்கரன், மற்றும் பத்மசிங் ஐசக் (ஆச்சி மசாலா) ஆகியோர் தங்களது பயணத்தில் கற்றுக் கொண்டவைகள் குறித்து பகிர்ந்தது புதிய தொழில் துவங்குவோருக்கு உந்து சக்தியாக அமைந்தது. இவர்கள் அனைவரும் தங்கள் தொழில்முனைவு அனுபவங்கள், புதுமையான முயற்சிகள் மற்றும் செயல் வடிவமைப்புகளை பகிர்ந்து கொண்டு கலந்து கொண்டோருக்கு தொழில் துறை சார்ந்த விலைமதிப்பற்ற அறிவை வழங்கினார்கள்.

நாள் முழுவதும் ஸ்டார்ட்அப்கள், தொழில்நுட்பம், பிராண்டிங், தலைமைத்துவம் மற்றும் சமூகத்தில் தொழிலின் தாக்கம் ஆகிய அனைத்து துறைகளின் கலந்துரையாடல்கள் நடைபெற்றன. கலந்து கொண்டவர்கள் அனைவரும் புத்துணர்ச்சியுடன், ஊக்கத்துடன் மற்றும் தொழிலை வளர்க்கும் நடைமுறை கருத்துகளையும் நேர்மறை சிந்தனையையும் வழங்கி பிஸ்கான்’25 ஐ நிறைவு செய்தனர்.

திரு. வி.சி. பிரவீன் தலைமையிலான CTMA, தொழில்முனைவை மேம்படுத்தும் தனது நோக்கத்தை சிறப்பாக வெளிப்படுத்தி, எதிர்கால முயற்சிகளுக்கு புதிய அளவுகோலை அமைத்து சாதனை படைத்துள்ளார். “Entrepreneurship Redefined” – தொழில்முனைவுக்கு புதிய வரையறையை அளித்த பிஸ்கான்’25.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *