ஜெய் நடிப்பில் உருவாகும் ஒர்க்கர்..!

ஜெய் நடிப்பில் உருவாகும் ஒர்க்கர்

ப்ரிமுக் பிரசன்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஜெய், யோகி பாபு, ரீஷ்மா நனையா நடிப்பில் உருவாகும் ஒர்க்கர் திரைப்படம்

ப்ரிமுக் பிரசன்ட்ஸ் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புதிய படம் இன்று பாரம்பரிய பூஜை விழாவுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெய் தற்போது ‘ஒர்க்கர்’ என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் ஜெய்க்கு ஜோடியாக ரீஷ்மா நனையா நடிக்கிறார். வினய் கிருஷ்ணா இயக்கும் இப்படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், நாகினீடு, பரத் கல்யாண், பிரவீனா, ஸ்ரீஜா ரவி, சசி லயா, வெங்கட் செங்குட்டுவன் ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

உண்மை உணர்வுகள், சுவாரஸ்யமான கதை, ரசிகர்களை கவரும் தருணங்களால் “ஒர்க்கர்” திரைப்படம் நிறைந்திருக்கும் என்று இயக்குநர் வினய் கிருஷ்ணா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த லட்சிய முயற்சியை ப்ரிமுக் பிரசன்ட்ஸ் நிறுவனம் சார்பாக M.ஷோபனா ராணி தயாரிக்கிறார். அஞ்சி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

ஒர்க்கர் படத்தின் பூஜை இன்று படக்குழுவினர் கலந்துக் கொள்ள சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மேலும் இதன் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற இருக்கிறது.

நடிகர்கள்

ஜெய், ரீஷ்மா நனையா, யோகி பாபு, நாகினீடு, பரத் கல்யாண், பிரவீனா, ஸ்ரீஜா ரவி, சசி லயா, வெங்கட் செங்குட்டுவன் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தொழில்நுட்பக் குழு

ஒளிப்பதிவாளர்: அஞ்சி
இசை: ஜிப்ரான்
சண்டைப் பயிற்சி: கணேஷ்
ஆடை வடிவமைப்பாளர்: பிரதிபா
ஒப்பனை: சக்திவேல்
மக்கள் தொடர்பு : சதீஷ் குமார், S2 Media

English Press Release

PRIMUK PRESENTS: GRAND LAUNCH ANNOUNCEMENT

The Much awaited new film from Primuk Presents has officially begun with a traditional pooja ceremony today.

Acclaimed actor Jai teams up with director Vinay Krishna for an exciting new project titled “WORKER.” This film promises to deliver raw emotion, gripping drama, and unforgettable moments on the big screen.

This ambitious venture is produced by M. Shobana Rani under the banner of Primuk Presents.

Cast

Jai in the lead role

Reeshma Nainah as the female lead

Yogi Babu, Nagineedu, Bharath Kalyan, Praveena, Sreeja Ravi, Sasi laya, Venkat Senguttuvan in key roles

Technical Crew

Cinematography: Anji

Music: Gibran

Costume Designer: Prathibha

Makeup: SakthiVel
Stunts: Ganesh
PRO: Sathish Kumar, S2 Media

The makers promise more exciting updates, including first-look posters and behind-the-scenes glimpses, in the coming weeks.

With its stellar cast, strong technical team, and engaging storyline, “WORKER” is set to be one of the most anticipated films of the year.

Stay tuned for more official announcements.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *