
மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு விளையாட்டு துறைக்கு கொடுத்துவரும் ஆதரவால் மற்றொரு மைல்கல்லை சாதனை உருவாகியுள்ளது!
தேசிய கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் கோப்பை 2025, குழந்தைகள் பிரிவில் தமிழ்நாடு ஒட்டுமொத்த கோப்பையை வென்றது!
சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தேசிய கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் – குழந்தைகள் மற்றும் கேடட்கள் 2025 இல், குழந்தைகள் பிரிவில் மாநில அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது. இதுமட்டுமல்லாது, கேடட் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்ததன் மூலம் தமிழ்நாட்டு விளையாட்டு துறைக்கும் பெருமை சேர்த்துள்ளது.
நாடு முழுவதிலுமிருந்து இளம் திறமையாளர்களை இந்த சாம்பியன்ஷிப் ஒன்றிணைத்துள்ளது. இதன் மூலம், கிக் பாக்ஸிங்கில் தமிழ்நாட்டின் வளர்ந்து வரும் தனது ஆதிக்கத்தையும் எடுத்துக்காட்டியுள்ளது. மாண்புமிகு துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலினின் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் விளையாட்டு துறையை மேம்படுத்தி, இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து வளர்ப்பதில் நம் மாநிலம் கவனம் செலுத்தி வருகிறது.
நிறைவு விழாவில் திரு. ஜே. மேகநாத ரெட்டி, ஐஏஎஸ், மெம்பர் செக்ரட்ரி ஆஃப் எஸ்டிஏடி கலந்து கொண்டு நிகழ்வுக்கு மேலும் பெருமை சேர்த்தார்.
தமிழ்நாடு மாநில அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்கத்தின் (TNSKA) முயற்சியால் இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது. பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றியதன் மூலம் இந்த சாதனையை அடைய முடிந்தது.
அடிமட்ட அளவில் கிக் பாக்ஸிங் திறமையாளர்களை கண்டறிந்து வளர்ப்பதிலும், குழந்தைகள் மற்றும் கேடட்கள் தேசிய அளவில் சிறந்து விளங்க ஒரு வலுவான தளத்தை வழங்குவதிலும் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது என்பதுஇந்த வெற்றியின் மூலம் மீண்டும் உறுதியாகியுள்ளது.