நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’ தொடர் அக்டோபர் 2 அன்று வெளியாகிறது!

நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’ தொடர் அக்டோபர் 2 அன்று வெளியாகிறது!

ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் நடிகர்கள் ஷ்ரதா ஸ்ரீநாத் மற்றும் சந்தோஷ் பிரதாப் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ் த்ரில்லர் கதை ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’. இந்தக் கதைக்காக நெட்ஃபிலிக்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மெண்ட் மீண்டும் ஒன்றிணைந்துள்ளது.

மும்பை, 4 செப்டம்பர் 2025: மிக ஆபத்தான பிளேயர்ஸ் தங்கள் முகத்தை எப்போதும் வெளியே காட்ட மாட்டார்கள். முகமூடிக்கு பின்பு தங்கள் முகத்தை மறைத்துக் கொண்டு நடக்கும் குழப்பங்களை கவனிக்கிறார்கள். அக்டோபர் 2 அன்று நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ப்ரீமியர் ஆகும் ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’ தொடர், ஹைப்பர் கனெக்டட் உலகின் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு நகரும் 2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் தமிழ் சீரிஸ் ஆகும். ரகசியங்கள் நழுவி, அழுத்தத்தை மீறி நம்பிக்கை உடைக்கப்படும்போது அடையாளமும் அதிகாரமும் வெளிப்படுகிறது என்பதே கதையின் சாரம்.

இந்த வருடம் வெளியான ‘பிளாக் வாரண்ட்’ வெற்றியைத் தொடர்ந்து ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’ சீரிஸூக்காக நெட்ஃபிலிக்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மெண்ட் மீண்டும் இணைந்துள்ளது. ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் நடிகர்கள் ஷ்ரதா ஸ்ரீநாத் மற்றும் சந்தோஷ் பிரதாப் முன்னணி கதாபாத்திரங்களிலும் சாந்தினி, ஷ்யாமா ஹரிணி, பாலா ஹசன், சுபாஷ் செல்வம், விவியா சந்த், தீரஜ் மற்றும் ஹேமா ஆகியோர் துணை கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர். தமிழ் ஒரிஜினல்ஸை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும் விதமாக இந்தக் கதையில் கூர்மையான கதை சொல்லல் மற்றும் டைம்லி தீம்ஸ் இடம் பெற்றுள்ளது.

நெட்ஃபிலிக்ஸ் இந்தியா கண்டெண்ட் வைஸ் பிரெசிடெண்ட், மோனிகா ஷெர்கில் பகிர்ந்து கொண்டதாவது, “இந்த வருடம் எங்களின் முதல் தமிழ் ஒரிஜினல்ஸ் ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’. இந்தக் கதை புதுமையாகவும் பார்வையாளர்களுடன் பொருந்திப் போகும் விதமாகவும் இருக்கும். ஒரு பெண் கேம் டெவலப்பர் தனக்கு எதிராக ஒருங்கிணைந்த தாக்குதலுக்கு காரணமானவர்களைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுவதைப் பின்தொடரும் ஒரு பரபரப்பான மிஸ்ட்ரி த்ரில்லர் கதை இது. அப்ளாஸ் எண்டர்டெயின்மெண்ட் உடன் நாங்கள் இணைந்த ‘பிளாக் வாரண்ட்’ நல்ல வரவேற்பு பெற்றது. இதைத்தொடர்ந்து தென்னிந்திய கதைக்காக நாங்கள் மீண்டும் ஒன்றிணைந்துள்ளோம். ராஜேஷ் எம். செல்வா இயக்கியுள்ள இந்தத் தொடர், சமகால டிஜிட்டல் வாழ்க்கையின் யதார்த்தங்களுக்கு ஏற்றவாறு உருவாகியுள்ளது” என்றார்.

அப்ளாஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சமீர் நாயர் பகிர்ந்து கொண்டதாவது, “இந்தக் கதை நமது டிஜிட்டல் யுகத்தின் யதார்த்தங்களைப் படம்பிடித்துள்ளது. அங்கு ஒவ்வொரு தேர்வும் உறவுகளின் போக்கை மாற்றும். இயக்குநர் ராஜேஷ் செல்வா தனித்துவமான தொடராக இதை உருவாக்கியுள்ளார். இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை ஆழமான கதைகள் சென்றடைய நெட்ஃபிலிக்ஸ் உடனான எங்களது பார்ட்னர்ஷிப் உதவும். உலகம் முழுவதும் பார்வையாளர்களுக்கு இந்தத் தொடரை கொண்டு சேர்ப்பதில் ஆர்வமாக உள்ளோம்” என்றார்.

இயக்குநர் ராஜேஷ் எம். செல்வா பகிர்ந்து கொண்டதாவது, “இந்தக் கதை வெறும் த்ரில்லர் மட்டுமல்ல! இது நாம் வாழும் உலகின் பிரதிபலிப்பாகும். நம் வாழ்க்கை திரைகள், ரகசியங்கள் மற்றும் மாறிவரும் நம்பிக்கைகளில் சிக்கியுள்ளது. இறுதியில் மக்கள், அவர்களின் தேர்வுகள், பாதிப்புகள் மற்றும் உண்மைக்கும் ஏமாற்றுதலுக்கும் இடையிலான பலவீனமான கோடு பற்றிய கதையாகவும் இது இருக்கும். நெட்ஃபிலிக்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மெண்டுடன் இணைந்து பணியாற்றுவது எங்கள் படைப்புக்கு எல்லையற்ற சுதந்திரம் கொடுத்தது. பார்வையாளர்கள் இந்தத் தொடரைப் பார்த்து அவர்கள் கருத்துக்களை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்” என்றார்.

நீங்கள் கேமில் இணையவில்லை; ஏற்கனவே நீங்களும் இந்த கேமின் ஒரு பகுதி. நெட்ஃபிலிக்ஸில் அக்டோபர் 2 அன்று ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’ பாருங்கள்!

நெட்ஃபிலிக்ஸ் பற்றி:

நெட்ஃபிலிக்ஸ் உலகின் முன்னணி பொழுதுபோக்கு சேவைகளில் ஒன்றாகும். 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் 300 மில்லியனுக்கும் அதிகமான கட்டண சந்தாதாரர்களைக் கொண்டு பல்வேறு ஜானர்கள் மற்றும் மொழிகளில் தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு போன்றவற்றைக் கொடுத்து வருகிறது. சந்தாதாரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம், இடைநிறுத்தலாம் மற்றும் மீண்டும் பார்க்கலாம். மேலும் எந்த நேரத்திலும் தங்கள் திட்டங்களை மாற்றலாம்.

அப்ளாஸ் எண்டர்டெயின்மெண்ட் பற்றி:

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் முன்னணி கண்டெண்ட் மற்றும் ஐபி கிரியேஷன் ஸ்டுடியோ ஆகும். டிராமா தொடர்கள், திரைப்படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் அனிமேஷன் கண்டெண்ட் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறது. ஊடக அனுபவமிக்க சமீர் நாயர் தலைமையிலான ஆதித்யா பிர்லா குழுமத்தின் முயற்சியே இந்த ஸ்டுடியோ. ருத்ரா: தி எட்ஜ் ஆஃப் டார்க்னஸ், மித்யா, கிரிமினல் ஜஸ்டிஸ், ஸ்கேம் 1992: தி ஹர்ஷத் மேத்தா ஸ்டோரி, ஸ்கேம் 2003: தி தெல்கி ஸ்டோரி, உண்டேகி, கஃபாஸ், பௌகால் என பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற பல்வேறு ஜானர்கள் மற்றும் மொழிகளில் பிரபலமான தொடர்களைத் தயாரித்து வெளியிட்டுள்ளது. இது மட்டுமல்லாது சமீபத்தில் பாராட்டப்பட்ட படமான ‘ஸ்விகாடோ’, தமிழில் வெற்றி பெற்ற ‘போர் தொழில்’, காதல்- நகைச்சுவை படமான ‘தோ அவுர் தோ பியார்’, நேரடியாக ஸ்ட்ரீம் செய்யப்பட்ட ஆவணப்படங்களில் ஒன்றான ‘மாடர்ன் மாஸ்டர்ஸ்’ போன்றவை பாராட்டப்பட்டது. நெட்ஃபிளிக்ஸ் மட்டுமல்லாது டிஸ்னி+ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோ, சோனி எல்ஐவி, எம்எக்ஸ் பிளேயர், ஜீ5 மற்றும் வூட் செலக்ட் போன்ற முன்னணி தளங்களுடன் இணைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *