
தற்காப்பு கலையை கற்றுள்ள இஷாக் ஹுசைனி நடித்து இயக்கும் ” பூகம்பம் “
தீபாவளி வெளியீடு!
இஷாக் ஹுசைனி தனது கராத்தே கலையில் எதிரிகளை வீழ்த்துவதில் வல்லவர். “பூகம்பம்”படத்தின் கதையை வெகு நாளாக உருவாக்கி அந்த கதையை பல தயாரிப்பாளர்களிடம் சொன்னார. சில தயாரிப்பாளர்கள் தயாரிக்க முன் வந்தனர்.கதையை படமாக்க பல கோடிகள் செலவாகும் என நினைத்தனர். பட்ஜெட் விஷயத்தில் தயாரிப்பாளர்கள் மிரண்டு போய் பின்வாங்கினார். உடனே துணிச்சலாக தனது சொந்தத் தயாரிப்பில் அதிக பொருட்செலவில் “பூகம்பம்” படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அனைத்து பணிமுடிவடைந்து.”பூகம்பம்” படத்தின் டிரைலர் விரைவில் ரிலீஸ் செய்வதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. “பூகம்பம்” படம் போலந்து. ஜெர்மன் ஆகிய நாடுகளில் வளர்ந்துள்ளது. வெளிநாட்டு படத்தின் டெக்னீஸ்களையும் பயன்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.
இதில் மிகப் பெரிய கலவர பூமியை உருவாக்கி கதையை மையப்படுத்தி இருக்கிறார். புதுமுகங்களுக்கு வாய்ப்புகளையும் கொடுத்து அதிக பொருட்செலவில் படத்தை தயாரித்து இருக்கிறார்.
படப்பிடிப்பு தளத்தில் இஷாக் ஹுசைனி இயக்குனராக பணியாற்றும் போது ஆங்கில படத்துக்கு ஈடாக காட்சிகளை அமைத்துள்ளார். தமிழ் திரை உலகத்துக்கு கிடைத்த ஒரு அற்புதமான இயக்குனராக இஷாக் ஹுசைனி பேசப்படுவார். தன்னுடன் நடிக்கும் கலைஞர்களையும் உற்சாகமாக வேலை வாங்கும் அற்புத கலைஞர் தான் இஷாக் ஹுசைனி.
தன் உயிரை பணயம் வைத்து மக்களுக்காக நல்ல அரசியல் தலைவரை தேர்ந்தெடுக்க பல வியூகங்களை வகுப்பதாக விறுவிறுப்பான காட்சிகளை வைத்துள்ளதாக கூறுகிறார் இயக்குனர்.
ஒரு அரசியல்வாதி தேர்தலில் ஜெயிக்க மக்களை ஏமாற்ற எப்படியெல்லாம் திட்டம் தீட்டுகிறார், மறுபுறம் வில்லன் கலவரத்தை உண்டு பண்ணிட முயற்சிக்கிறார். அதை முறியடித்து. நல்ல அரசியல் வாதியை தேர்ந்தெடுத்து சிம்மாசனத்தில் அமர வைக்கப் போராடுவதாக படத்தின் நாயகன் இஷாக் ஹுசைனி அமர்க்களப் படுத்தி இருக்கிறார்.
அக்டோபர் 17- இல் திரையரங்குகளில் உலகமெங்கும் ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அறிமுக நாயகி தில்சானா.ஹேமா நாயகன் இஷாக் ஹுசைனியிடம் காதல் வலையில் போடும் ஆட்டம் ரசிகர்களை உற்சாகப்படுத்தும்.
வில்லனாக களம் இறங்கும் ரிஷத்.N.M. இலியாஸ். மும்பை மல்கோத்ரா. மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்துள்ளனர்.படத்தின் ஒளிப்பதிவு தயாள்ஓஷோ -.தேவராஜ்.
இசை சதாசிவ ஜெயராமன். , சண்டை பயிற்சி கமாண்டர் கே பாபு. பொன்னேரி புயல் டாக்டர் ஜோதி. ஹாலிவுட் படங்களுக்கு ஈடாக சண்டைக் காட்சிகளை அற்புதமாக அமைத்திருக்கிறார்கள்.படத்தின் நாயகனான இஷாக் ஹுசைனி
தற்காப்பு கலையில் முறைப்படி பயிற்சி பெற்றவர்.
மறைந்த மதுரை மாவீரர் உலக புகழ்பெற்ற பிரபல கராத்தே வீரர். வில்வித்தை வீரர்.டாக்டர் ஷிகான் ஹுசைனி அவர்களிடம் நேரடி பயிற்சி பெற்ற இஷாக் ஹுசைனி அவரது உடன் பிறந்த சகோதரர் ஆவார்.
தனக்கேற்ற தற்காப்பு கலையில் விறுவிறுப்பான சண்டை காட்சிகளை தத்ரூபமாக படமாக்கி உள்ளார். இதுவரை தமிழ் திரைப்படங்களில் காணாத ஹாலிவுட் படங்களுக்கு ஈடாக படத்தில் வரும் கிளைமாக்ஸ் சண்டை காட்சிகளில் 50 ஸ்டண்ட் கலைஞர்களுடன் மோதும் வால் சண்டை காட்சிகள் ரசிகர்களை அதிரவைக்கும்.
எடிட்டர்: N.நவீன்குமார்.Di Gg :பாலா-விஜி கலை:பழனிக்குமார். டிசைனர் M.சிவசங்கர் ஸ்டில்ஸ்:நாகை ரவி. மக்கள் தொடர்பு N.விஜய முரளி இணைஇயக்கம். தயாரிப்பு மேற்பார்வை N.M.இலியாஸ். கதை-திரைக்கதை- வசனம்-டைரக்ஷன்- இஷாக் ஹுசைனி . தயாரிப்பு ஐ இன்டர்நேஷனல்
தீபாவளி ரேஸ் படங்களில் முதல் படமாக இதனை தயாரித்துள்ள ஐ இண்டர்நேஷனல் நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விஜயமுரளி
PRO