
காயல் – விமர்சனம்
அழகு தேவதையாக துள்ளிக் குதித்திருக்கிறார் காயத்ரி சங்கர். சாதி பாகுபாட்டினை பார்க்காமல், அது ஒரு பெரிய விஷயமாகவே கருதாமல் வசனங்களால் கடந்து செல்வதெல்லாம் திரைக்கதைக்கு பலமாக பார்க்கப்படுகிறது.
ரமேஷ் திலக்கின் கதாபாத்திரம் கலங்க வைத்திருக்கிறது. கண்களால் கவிதையாக வந்து சென்றிருக்கிறார் நாயகி ஸ்வகதா கிருஷ்ணா.
சாதிய பாகுபாடு குறித்த படம் என்றால், இப்படியான ஒரு திரைக்கதை, இப்படியான கதாபாத்திரம், இப்படியான பார்வை என்று இருந்த தமிழ் சினிமாவில் “காயல்” ஒரு வித்தியாசமான படைப்பு தான்.
மற்ற சினிமாவிலிருந்து காயல் முற்றிலும் மாறுபட்டு, நிகழ்கால சாதிய பாகுபாடானது எதுவரை இருக்கிறது.? அது எதுவரை செல்லும் என்பதை வெளிச்சமாக காட்டியிருக்கிறார் இயக்குனர்.
இந்த முயற்சிக்காகவே இயக்குனரை வெகுவாகவே பாராட்டலாம். ஒளிப்பதிவு வெளி வெளிச்சத்தை அழகாக காட்டி படத்தோடு நம்மையும் ஒன்ற வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
பாடல்கள் நம் மனதினை நன்றாகவே உருக வைத்துவிட்டது. க்ளைமாக்ஸ் காட்சியில் கண்களில் ஈரம் எட்டிப் பார்க்க வைத்துவிடுகிறது.
படம் முடிந்த பின்னும் காயத்ரியின் கண்கள் உங்கள் கண்களில் நின்றால் படத்திற்கு அதுவே வெற்றி..