
இந்தியானா பல்கலைக்கழகத்தில் தலைமைத்துவ விருது மாணவி அன்சு மாலிகா ரோஜா செல்வமணிக்கு வழங்கப்பட்டது
ப்ளூ மிண்டன் இன் செப்டம்பர் -4 2025 பெண்கள் மற்றும் தொழிற்நுட்பத்திற்கான சிறப்பு மையம் 2025 கல்வி ஆண்டிற்கான மௌரியன் பிக்சர்ஸ் தலைமைத்துவ விருதை பெறுபவராக இந்திய மாணவி அன்சு மாலிகா ரோஜா செல்வமணியை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது.மவுரின் பிக்சர்ஸ் இந்த விருது கல்வி மற்றும் தொழில்முறை சிறப்பின் சேவையில் தொழில்நுட்ப திறன்களை பயன்படுத்துவதில் நீண்டகால அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய மாணவர்களை அங்கீகரிக்கிறது அறிவாற்றல் அறிவியல் இளங்கலை பட்டம் படிக்கும் மாணவரான அன்சு மாலிகா ரோஜா செல்வமணி அனைவருக்கும் டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப சமத்துவத்தை மேம்படுத்துவதில் ஒரு தலைவராக தன்னை உருவாக்கிக் கொண்டுள்ளார். உலகெங்கிலும் உள்ள பின்தங்கிய சமூகங்களை உள்ளடக்கிய அணுகக்கூடிய தொழில்நுட்ப கல்வி வாய்ப்புகளை உருவாக்குவதில் அவரது பணி மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது.
பைனரி
கோரிசான்சின் நிறுவனராக (Binary horizones foundation)
நமீபியா,நைஜீரியா மற்றும் இந்திய போன்ற நாடுகளில் குறியீட்டு பயிற்சிகள் டிஜிட்டல் கல்வி அறிவு பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் மூலம் டிஜிட்டல் பிளவை குறைக்கும் முயற்சிகளுக்கு அன்சுமாலிகா ரோஜா செல்வமணி தலைமை தாங்கி உள்ளார்.
2024 ஆண்டு ஆப்பிரிக்காவில் உள்ள நமீபியா நைஜீரியா போன்ற நாடுகளில் உள்ள பின்தங்கிய சமூகங்களை சேர்ந்த மாணவர்களுக்கான நடைமுறை பல உள்ளூர் சவால்களை சந்தித்து நடைமுறைப்படுத்தி உள்ளார். ஒரு குறியீட்டு வரியை கூட எழுத பழகாத மாணவர்களை பல சவால்களை எதிர்கொண்டு பயிற்சி அளித்து தொழில்நுட்ப தேர்வுகளை வடிவமைத்துள்ளார்.
அனைத்து பின்தங்கிய மக்களுக்கும் இந்த தொழில்நுட்பம் சென்று அடைவதற்கு அனைத்து பின்னணியில் இருக்கும் இளைஞர்களை தொழில் நுட்ப படைப்பாளர்களாக மாற்றுவதற்கும் இவர் முழு முயற்சி செய்துள்ளார்.
ஜான்பியாவில் பெண்களுக்கான குறியீட்டு முகாம்களையும் அவர் நடத்தி உள்ளார். பல்கலைக்கழக வயதுடைய பெண்களுக்கு வேலை மேம்பாட்டு பயிற்சி தனிப்பட்ட பிராண்டிங் கருவிகள் மற்றும் தொழில்நுட்ப யோசனைகளை வழங்குவதற்கான வாய்ப்புகளை வழங்கி உள்ளார்.வழிகாட்டுதல் மற்றும் தொழில்நுட்ப அறிவுறுத்தல் மூலம் இந்தத் திட்டம் இளம்பெண்கள் தொழில்நுட்பத்தில் தொழில் வாழ்க்கையை தொடர வாய்ப்பு அளித்துள்ளது. தொழில்நுட்பத்தில் பெண்களுக்கு உள்ள தடைகளை நீக்கி தொழில் நுட்ப மையத்துடன் நேரடியாக இணைத்துள்ளார்.
அன்சு மாலிகா ரோஜா செல்வமணியின் தொடர்ந்த இந்த சேவை உருவாக்கத்திற்கு அப்பாற்பட்டது.அவர் உலகளாவிய இந்த சேவை உருவாக்கத்திற்கு அப்பாற்பட்டது. வளங்களை குறைவாக அணுகும் ஆர்வமுள்ள தொழில் நுட்ப தொழில் முனைவோருக்கு வழிகாட்டி உள்ளார். மேலும் டிஜிட்டல் சமத்துவத்திற்கான அவரது பங்களிப்புகளை அங்கீகரிக்கும் பல விருதுகளை பெற்றுள்ளார்.அவரது தற்போதைய கல்வி ஆர்வங்களில் செயற்கை நுண்ணறிவு மனிதனை மையமாகக் கொண்ட வடிவமைப்பு மற்றும் உதவி தொழில் நுட்பங்கள் ஆகியவை அடங்கும் சமூக சவால்களுக்கான அனைத்து வகையான தீர்வுகளை இணைத்து உருவாக்கி மாணவர்களையும் வழிகாட்டிகளையும் இணைக்கும் உள்ளடக்கிய தலங்களை உருவாக்குவதில் முனைந்துள்ளார்.
அவரது தலைமை தொலைநோக்கு மற்றும் உலகளாவிய தாக்கம் தொழில்நுட்ப சமத்துவம் வாழ்க்கையை மாற்றும் மற்றும் அனைவருக்கும் கல்வி மற்றும் தொழில்நுட்ப வாய்ப்புகளுக்கான கதவுகளை திறக்கும் என்ற நம்பிக்கையை இந்த விருதை அவருக்கு வழங்க காரணமாகும்.
அன்சுமாலிகா ரோஜா செல்வமணி அவர்களின் தொழில் நுட்பத்தை மேம்படுத்து வதற்கான கடின உழைப்பு மற்றும் புதுமைக்கான அவரது அர்ப்பணிப்பு மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. பட்டப்படிப்பு மற்றும் மேற்படிப்பை அவர் எதிர்நோக்கி உள்ள நிலையில் உள்ளூர் மற்றும் உலகளாவிய அளவில் மிக நியாயமான மற்றும் சமமான தொழில்நுட்ப நிலப்பரப்பை உருவாக்குவதில் அவர் ஏற்படுத்தும் தொடர்ச்சியான தாக்கத்தை அங்கீகரித்து இந்த விருதை அவருக்கு வழங்குகின்றோம்.