கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தொழில் அதிபர் ஏ.எம். கோபாலன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது வேல்ஸ் பல்கலைக்கழகம்

கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தொழில் அதிபர் ஏ.எம். கோபாலன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது வேல்ஸ் பல்கலைக்கழகம்

பல்லாவரத்தில் அமைந்துள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக சட்டம் மற்றும் நீதித்துறை, நாடாளுமன்ற விவகாரத்துறை மத்திய அமைச்சர் திரு.அர்ஜுன் ராம் மேக்வால் கலந்துக்கொண்டு உரையாற்றினார் .அதில் அவர் ”இந்தியா 2047க் கனவை அடைய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தொழில் புரட்சி 4.0 யுகத்தில் செயற்கை நுண்ணறிவு, மெஷின் லெர்னிங் போன்ற துறைகள் முன்னிலை வகிக்கின்றன எனக் குறிப்பிட்ட அவர், பட்டதாரிகள் சமூகப் பொறுப்பு, நிலைத்தன்மை ஆகியவற்றை வழிகாட்டுதலாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்றார். இந்தியா விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவாகும் என்றும், 5,000-க்கும் மேற்பட்ட பட்டதாரிகளை வாழ்த்தியும் அவர் உரையை நிறைவு செய்தார்”.

இவ்விழாவில் மொத்தம் 4,992 மாணவர்கள் பட்டம் பெற்றனர். இதில் 3,631 இளநிலை பட்டதாரிகள், 1,155 முதுகலை, 2 எம்.பில் மற்றும் 204 முனைவர் பட்டதாரிகள் அடங்குவர்.

கவுரவ டாக்டர் பட்டம் (Honoris Causa) பெற்றவர்கள்

திரு. ஏ.எம். கோபாலன் – நிறுவனர் & தலைவர், ஸ்ரீ கோகுலம் குழுமம்
“கோகுலம் கோபாலன்” என்ற பெயரில் அறியப்படும் இவர், நிதி, ஹோட்டல்கள், சுகாதாரம், கல்வி மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் வியாபார வெற்றியை உருவாக்கிய முன்னணி தொழிலதிபர் ஆவார்.அவர் உருவாக்கிய ஸ்ரீ கோகுலம் சிட் & ஃபைனான்ஸ் மூலம் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பயன்பெற்றுள்ளனர். கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக நலனில் அவருடைய அறக்கட்டளையின் பங்களிப்பு பாராட்டத்தக்கது.
திரு. ரவிச்சந்திரன் அஷ்வின் – இந்திய கிரிக்கெட் வீரர்
இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான அஷ்வின், 537 டெஸ்ட் விக்கெட்டுகள், ஆறு டெஸ்ட் சதங்கள் உள்ளிட்ட பல சாதனைகளை புரிந்துள்ளார். 2011 உலகக் கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிரோபியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்தவர். 2016-இல் ICC Cricketer of the Year மற்றும் Test Cricketer of the Year விருதுகளையும் பெற்றார்.
2024 டிசம்பரில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அஷ்வின், இந்தியாவின் இரண்டாவது அதிக டெஸ்ட் விக்கெட் எடுக்கப்பட்டவர் என்ற பெருமையுடன் விளையாட்டை விட்டு வெளியேறினார். சமூக வலைதளங்கள் மூலம் இளைஞர்களை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார். இவருக்கு மத்திய அரசு பதம்ஸ்ரீ விருதை வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.

திரு. வெற்றிமாறன் – தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர்
பொதுவுடைமை மற்றும் சமூக நீதி ஆகியவற்றில் ஆழமான பற்று கொண்ட திரைப்பட இயக்குநராக வெற்றிமாறன் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ளார். ஆடுகளம், விசாரணை, அசுரன், விடுதலை போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமாவுக்கு புதிய வரையறையை அளித்துள்ளார்.
அவரது ஆடுகளம் திரைப்படம் ஆறு தேசிய விருதுகள் பெற்றது. விசாரணை இந்தியாவின் ஆஸ்கர் பரிந்துரைக்கான உத்தியோகபூர்வத் தேர்வு செய்யப்பட்ட சிறந்தப் படமாகும். சமூக பிரச்சினைகளை ஆழமாக சித்தரிக்கும் அவரது படைப்புகள் உலக அளவில் பாராட்டைப் பெற்றுள்ளன.இவர்கள் செய்த சாதனைகளை பாராட்டி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியதுவேல்ஸ் பல்கலைக்கழகம்.

விழாவில் உரையாற்றிய வேல்ஸ் பல்கலைக்கழகச் வேந்தர் டாக்டர் ஐசரி கே. கணேஷ்:
“வணிகம், விளையாட்டு, மற்றும் கலைத்துறையில் இலட்சக்கணக்கான மக்களை ஊக்குவித்த தலைவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது எங்களுக்கு பெருமை. அவர்களின் பயணம் கடின உழைப்பு, விடாமுயற்சியின் சின்னமாக திகழ்கிறது. எங்கள் மாணவர்களுக்கும் எதிர்கால சந்ததிக்கும் அவர்கள் ஒரு ஊக்கமளிக்கும் முன்மாதிரியாக இருப்பார்கள்.”

வேல்ஸ் பல்கலைக்கழகம் குறித்து

சென்னை வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ், டெக்னாலஜி அண்ட் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் (VISTAS), 2008 ஆம் ஆண்டு இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் (MHRD) பல்கலைக்கழக அந்தஸ்து பெற்றது. VAELS அறக்கட்டளையின் கீழ் இயங்கும் இப் பல்கலைக்கழகம், 100க்கும் மேற்பட்ட இளநிலைபடிப்பு, முதுகலை மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளை வழங்குகிறது.
மருத்துவம், பொறியியல், நர்சிங், மருந்தியல், சட்டம், வர்த்தகம், ஊடகம், கல்வி, கடல்சார் கல்வி, கணினி அறிவியல் போன்ற துறைகளில் பட்டப்படிப்புகளை வழங்குகிறது. UGC, AICTE, NMC, INC, PCI, BCI, DGS, NCTE போன்ற அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட இப் பல்கலைக்கழகம் தற்போது 18,000க்கும் மேற்பட்ட மாணவர்களையும் 1,100 பேராசிரியர்களையும் கொண்டுள்ளது. NAAC A++ தரச் சான்றிதழ் பெற்ற இப் பல்கலைக்கழகம், 11 NBA அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவுகளை வழங்கி, UGC 12(B) அந்தஸ்தைப் பெற்றுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான NIRF தரவரிசையில் 101–150 இடம் பிடித்ததுடன், மருந்தியல் துறை 61வது இடத்தை பெற்றுள்ளது.

ஃபோட்டோ கேப்ஷன்

இடமிருந்து வலம் – வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 16-வது பட்டமளிப்பு விழாவில், இடமிருந்து வலமாக – தேர்வுகள் தேர்வுகள் கட்டுப்பாட்டாளர் டாக்டர் A. உதயகுமார், பதிவாளர் டாக்டர் P. சரவணன், துணைவேந்தர் டாக்டர் M. பாஸ்கரன் (F.A.C) , இணை வேந்தர் டாக்டர் A. ஜோதி முருகன், நிறுவன-வேந்தர் டாக்டர் ஐசரி.கே. கணேஷ், முதன்மை விருந்தினராக மத்திய சட்ட & நீதி மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் திரு. அர்ஜுன் ராம் மேக்வால், இந்திய கிரிக்கெட் வீரர் R.அஷ்வின், வேல்ஸ் கல்விக்குழும துணைத் தலைவர் டாக்டர் ப்ரீத்தா கணேஷ், ஸ்ரீ கோகுலம் குழும நிறுவனங்களின் நிறுவனர் & தலைவர் திரு A.M. கோபாலன், திரைப்பட இயக்குனர் திரு வெற்றிமாறன் ஆகியோர் கௌரவப்பட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *