சித்தார்த்தின் “மிஸ் யூ” திரைப்படம் நவம்பர் 29 ஆம் தேதி, திரைக்கு வருகிறது!!

சித்தார்த்தின் “மிஸ் யூ” திரைப்படம் நவம்பர் 29 ஆம் தேதி, திரைக்கு வருகிறது!!

ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியீட்டில் தமிழகமெங்கும் “மிஸ் யூ” திரைப்படம், நவம்பர் 29 ஆம் தேதி திரைக்கு வருகிறது!!

‘7 MILES PER SECOND’ நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் N.ராஜசேகர் இயக்கத்தில், சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் இளமை துள்ளலுடன், துறுதுறுப்பான ரொமான்ஸ் திரைப்படமாக உருவாகியுள்ள “மிஸ் யூ” திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 29 ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தைத் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை அழகான ஒரு போஸ்டர் மூலம் தயாரிப்பு தரப்பு இன்று இணையத்தில் வெளியிட்டுள்ளனர். முன்னதாக இப்படத்திலிருந்து “நீ என்ன பார்த்தியா” மற்றும் “சொன்னாரு நைனா” பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டிருப்பது, ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு இளைஞன் தனக்கு ஒத்துவராத, பிடிக்காத ஒரு பெண்ணை, தீவிரமாகக் காதலிக்கிறான் ஏன் ?, எப்படி? எதற்கு? தனக்குப் பிடிக்கவில்லை எனும் போது, நாயகன் ஏன் காதலிக்கிறான் எனும் கேள்விக்குப்பின்னால் உள்ள சுவாரஸ்யம் தான் இந்தப்படம்.

இன்றைய தலைமுறை இளைஞர்களின் காதலை அழகான திரைக்கதையில் கோர்த்து, அனைவரும் ரசித்து மகிழும் வகையில், அழகான ரொமான்ஸ் காமெடி ஜானரில் இப்படத்தை இயக்கியுள்ளார், ‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ போன்ற கமர்சியல் ஹிட் படங்களை இயக்கிய N.ராஜசேகர்.

‘சித்தா’வின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இளமை துள்ளலுடன் இப்படத்தில் களமிறங்குகிறார் சித்தார்த். தெலுங்கு, கன்னடத்தில் புகழ்பெற்ற ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடிக்கிறார்.

இவர்களுடன் ஜே.பி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா, ரமா, பாலசரவணன், ‘லொள்ளு சபா’ மாறன், சஸ்டிகா என பலரும் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

முன்னணி இசையமைப்பாளர் ஜிப்ரான் இப்படத்தின் பாடல்களுக்காகச் சிறப்பாக மெனக்கெட்டு 8 பாடல்களை வழங்கியுள்ளார்.
‘சதுரங்க வேட்டை’ போன்ற பல வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த KG.வெங்கடேஷ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை தினேஷ் பொன்ராஜ் கவனிக்கிறார். தினேஷ் நடனம் அமைக்கிறார். களத்தில் சந்திப்போம், பேப்பர் ராக்கெட் போன்ற படங்களுக்கும் வெப்சீரீஸ்களுக்கும் வசனம் எழுதிய அசோக்.R இப்படத்தின் வசனங்களை எழுதியுள்ளதோடு, இயக்குநரோடு இணைந்து திரைக்கதை அமைத்துள்ளார்.

இப்படத்தைத் தமிழகமெங்கும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட, உலகமெங்கும் ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தின் இசை உரிமையை பெரும் விலைக்கு டி சீரிஸ் பெற்றுள்ளது. இப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசாம் ப்ரைம் நிறுவனம் பெற்றுள்ளது.

இளைஞர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம், வரும் நவம்பர் 29 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Pro: Johnson

“Miss You” All Set to Hit the Screens on November 29th!

Chennai, India:

Red Giant Movies is gearing up to release the much-anticipated Tamil romantic comedy, “Miss You,” starring Siddharth and Ashika Ranganath, on November 29th. Produced by Samuel Mathew under the banner of ‘7 MILES PER SECOND’ and directed by N. Rajasekar, the film promises a youthful and energetic romantic tale.

The film’s intriguing premise revolves around a young man who is deeply in love with a woman he seemingly dislikes. The film delves into the complexities of his feelings and explores the reasons behind this unconventional affection.

Directed by N. Rajasekar, known for commercial hits like “Maapla Singam” and “Kalathil Sandipom,” “Miss You” is a modern take on love, tailor-made for the youth of today. The film’s trailer and the previously released songs, “Nee Enna Paathiye” and “Sonnaaru Naina,” have already garnered significant attention and excitement among fans.

Siddharth, fresh off the success of “Chittha,” returns to the screen with a youthful and energetic performance. Ashika Ranganath, a popular face in Telugu and Kannada cinema, makes her Tamil debut opposite Siddharth. The supporting cast includes JP, Ponvannan, Karunakaran, Nareen, Anupama, Rama, Balasubramaniam, ‘Lollu Sabha’ Maaran, and Sastika.

The film’s music, composed by Ghibran, features eight soulful tracks. KG. Venkatesh, known for his work in films like “Sathuranga Vettai,” has handled the cinematography. Dinesh Ponraj has edited the film, while Dinesh Master has choreographed the dance sequences. Ashok.R, who has penned dialogues for films like “Kalathil Sandipom” and web series, has also co-written the screenplay with the director.

Red Giant Movies will be distributing the film across Tamil Nadu, while Ayangaran International will handle the worldwide release. The music rights have been acquired by T-Series, and Amazon Prime has secured the digital streaming rights.

With its captivating storyline, talented cast, and melodious music, “Miss You” is all set to enthrall audiences worldwide.

PRO : Johnson

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *