PT சார்
இயக்கம் – கார்த்திக் வேணுகோபால்
நடிகர்கள் – ஹிப் ஹாப் ஆதி, காஷ்மிரா, பாக்கியராஜ்.
இசை – ஹிப் ஹாப் ஆதி
தயாரிப்பு – வேல்ஸ் இன்டர்நேஷனல் – ஐசரி கணேஷ்
ஒருவன் தன் தாயின் அரவணைப்பில் ஒரு பள்ளியில் பிடி வாத்தியாராக வேலை வருகிறார். அவர் வேலை பார்க்கும் பள்ளி நிறுவனத்தில் மேஜிக் சுவர் எனும் சுவாரஸ்யமான விஷயத்தை மாணவர்களுக்கு மத்தியில் உருவாக்கி பாராட்டுகளைப் பெறுகிறார். அது அவருக்கு அனைவரிடமும் ஒரு நல்ல மதிப்பை பெற்று தருகிறது, ஆனால் இதே சுவரால், எதிர்வீட்டுப் பெண் மூலம் எதிர்பாராத பிரச்னை ஏற்படுகிறது, அவர் வேலை பார்க்கும் கல்வி நிறுவனத்துக்குள்ளேயே அந்த பிரச்சினை ஏற்படுகிறது. விளையாட்டுத் தனமாய் இருந்த ஹிப் ஹாப் ஆதி சமூகப் பிரச்னையாய் மாறும் இந்த விஷயத்தை எப்படி சரி செய்கிறார், என்பதே படத்தின் மீதிக்கதை.
ஹிப் ஹாப் ஆதி பிடி வாத்தியார் கனகவேலாக இந்தப் படத்தில் நடித்துள்ளார், பிடி வாத்தியார் கெட்- அப்புக்கு அருமையாக பொருந்திப்போய் துறுதுறுவென நடித்திருக்கிறார், நடிப்பில் இன்னும் பாஸ் மார்க் வாங்கவே இன்னும் திணறுகிறார். கண்டிப்பாக அவர் நடிப்புக்கு பயிற்சி சென்றுதான் ஆக வேண்டும், எல்லா படங்களிலும் கதையே அவரை காப்பாற்றாது,
கதாநாயகி காஷ்மீரா தமிழ் சினிமாவின் வழக்கமான நடிகையாக வழக்கம்போல் டூயட்டுக்கும் நாயகன் ஹிப் ஹாப் ஆதியை பின்னால் சுற்ற விடவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். நாயகியைத் தாண்டி கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரோலில் நடிகை அனிகா. கதை இவரை மையப்படுத்தியே அமைந்துள்ள நிலையில், தேவையான அளவான நடிப்பை வழங்கி படத்துடன் ஒன்ற வைத்துள்ளார். தியாகராஜன் வில்லனாக படத்தில் மிரட்டு இருக்கிறார். பிரபு, பாக்கியராஜ், தேவதர்ஷினி, பட்டிமன்றம் ராஜா என நட்சத்திரப் பட்டாளம் இருந்தாலும், இளவரசு மட்டுமே கவனம் ஈர்க்கிறார். பாண்டியராஜன், முனீஷ்காந்த் என காமெடிக்காக நடிகர்கள் மட்டுமே படத்தில் இருக்கிறார்கள்.
படத்தின் முதல் பாதியில் பல தேவையற்ற காட்சிகள் கொடுத்த பின்புதான் கதைக்கே வருகின்றனர், திரைக்கதையை வழமையாக நகர்த்தி க்ளைமேக்ஸில் ட்விஸ்ட் வைத்திருக்கிறார்கள். ஒரு கமர்ஷியல் படத்திற்கு தேவையான கதை இருந்தாலும் படம் டெக்னிகல் பார்வையில் சற்று ஈடு செய்யவில்லை , அதனால் படம் மெதுவாக நக்ர்வது போல உள்ளது,
இந்தப் படத்திற்கு நாயகன் ஹிப் ஹாப் ஆதி தான் இசையமைத்துள்ளார், படத்தின் பாடல்கள் பின்னணி இசை சிறப்பாக அமைத்துள்ளார்.
வழக்கமான கதையில் பாலியல் தொந்தரவு மற்றும் அன்றாடம் அனைத்து வயது பெண்களும் சந்திக்கும் பிரச்னைகளைப் பேச படக்குழுவினர் முயற்சி செய்துள்ளனர். பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்டோர் மீது சமூகம் நிகழ்த்தும் தாக்குதல்களையும் அடிக்கோடிட்டுக் காண்பித்துள்ளனர். ஆனால் அந்த முயற்சியை கொஞ்சம் திரைக்கதையில் காம்பித்திருக்கலாம்,
மொத்தத்தில் இந்த ‘PT சார்’ சமூக கருத்துகளை கொண்ட ஒரு கமர்ஷியல்
Rating 3.8/5