ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வித்தியாசமாக அறிமுகப் படுத்திய “பன் பட்டர் ஜாம்” குழுவினர்!!

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வித்தியாசமாக அறிமுகப் படுத்திய “பன் பட்டர் ஜாம்” குழுவினர்!!

ராஜு ( பிக் பாஸ் ) கதாநாயகனாக அறிமுகமானார்.

Rain Of Arrows Entertainment சார்பில்
சுரேஷ் சுப்ரமணியன் தயாரிக்கிறார்.
‘எண்ணித்துணிக’ படத்தை அடுத்து இரண்டாவது படமாக இப்படத்தை தயாரிக்கிறார்.

சாதாரணமாக ஒரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பேப்பரிலும், சோசியல் மீடியாவிலும் வெளியிடுவதுதான் வழக்கம். ஆனால் வழக்கத்துக்கு மாறாக இப்படத்தின்
30 அடி உயரம் கொண்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரசாத் ஸ்டுடியோ வளாகத்தில் உள்ள உயர்ந்த சுவரில் மேலிருந்து கீழாக இறக்கி மீடியா முன்பாக வெளியிட்டது புதுமையாக இருந்தது. அனைவரின் கை தட்டல்கள் உடன் கதாநாயகன் ராஜீ அந்த ஃபர்ஸ்ட் போஸ்டர் முன்பு தோன்றி பேசி நன்றி தெரிவித்தார்.

இப்படத்தை ராகவ் மிர்தாத் இயக்குகிறார்.
‘காலங்களில் அவள் வசந்தம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர் இயக்கும் இரண்டாவது படம் இது.

வாழ்வில் எத்தனையோ பிரச்சனைகள் நம்மை சுற்றி இருந்தாலும், அதை இதயத்தில் ஏற்றிக் கொண்டு வருந்தாமல், அந்தந்த கணத்தை கடந்தபடி சந்தோஷமாக சென்றால் வாழ்வு “பன் பட்டர் ஜாமை” போல் இனிக்கும் என்கிற ஜாலியான கருத்தை முதல் பார்வை போஸ்டரிலேயே அழுத்தம் திருத்தமாக சொல்லி இருக்கிறார்கள். இது அனைவரையும் ரசிக்க வைத்தது.

வழக்கமான போஸ்டர் பாணியில் இல்லாமல், முழுக்க முழுக்க கைகளாலேயே வரைந்து, renaissance ஓவிய அமைப்பில் இந்த போஸ்டரை வடிவமைத்திருக்கிறார்கள். சுற்றி பல்வேறு கால கட்டத்தில் உலக வரலாற்றில் நடந்த போர் காட்சிகளைப் போல், நடு நாயகமாக, படத்தின் நாயகன் ராஜு அமர்ந்து “பன் பட்டர் ஜாம்” சாப்பிடுவதுபோல் வரைந்திருக்கிறார்கள். அவர்மேல் அம்புகள் துளைக்கப்பட்டும், வல்லூறுகள் அவர் மீது அமர்ந்து அவர் சதையை உண்ணுவது போலவும், ஆனாலும் நெற்றியில் வழியும் ரத்தத்தோடு, புன்னகை மாறாமல் ராஜு அமர்ந்து “பன் பட்டர் ஜாம்”
சாப்பிடுவது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அந்த போஸ்டர் மிகப் பெரிய கவன ஈர்ப்பை பெற்றிருக்கிறது.

அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் பீல் குட் ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படத்தை ராகவ் மிர்தாத் உருவாக்கியுள்ளார். ராஜீ கதாநாயகனாக நடிக்க, ஆத்யா பிரசாத் மற்றும் பவ்யா திரிகா நாயகிகளாக நடிக்கிறார்கள். முக்கியமாக சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி ஜோடி அதகளப்படுத்தியுள்ளார்கள். அதேபோல் சார்லியின் கதாப்பாத்திரம் அவரின் அடுத்த மைல் கல்லாக இப்படம் இருக்கும். இவர்களுடன் மைக்கேல் தங்கதுரை மற்றும் V.J பப்பு முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

இன்றைய Gen Z தலைமுறை ரிலேஷன்ஷிப்பை நகைச்சுவை ததும்பச் சொல்லும், அழகான டிராமாவாக உருவாகி வரும் திரைப்படம் ”பன் பட்டர் ஜாம்”.

சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இப்போது இறுதிக்கட்ட வேலைகள் நடந்து வருகிறது.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

தயாரிப்பு நிறுவனம் :
Rain Of Arrows Entertainment
எழுத்து , இயக்கம் : ராகவ் மிர்தாத்
இசை: நிவாஸ் K பிரசன்னா
ஒளிப்பதிவு : பாபு குமார் IE
எடிட்டிங்: ஜான் ஆபிரகாம்
கலை இயக்குநர் : ஸ்ரீ சசிகுமார்
பாடல்கள்: கார்த்திக் நேதா, உமா தேவி, மோகன் ராஜா, சரஸ்வதி மேனன்
நடனம்: பாபி
நிர்வாக தயாரிப்பு : M.J.பாரதி
மக்கள் தொடர்பு : ஜான்சன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *