அப்புக்குட்டி கதையின் நாயகனாக நடிக்கும் “பிறந்தநாள் வாழ்த்துகள்” படக்குழுவினர், காதலர் தினத்தில் தங்கள் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மிகவும் வித்யாசமான முறையில், Valentine’s Day Cheers என வெளியிட்டுள்ளனர்!
ராஜு சந்திரா எழுதி இயக்கியிருக்கும் “பிறந்தநாள் வாழ்த்துகள்” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி இப்படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.
இப்படத்தை பிளான் த்ரீ ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில்,
ரோஜி மேத்யூ, ராஜு சந்திரா இருவரும் தயாரிக்க,
மாதன்ஸ் குழுமம் இணைந்து தயாரித்துள்ளது. மலையாள நடிகை ஐஸ்வர்யா அனில், இப்படத்தின் மூலம் தமிழில் கதையின் நாயகியாக அறிமுகம் ஆகிறார். ஸ்ரீஜா ரவி மற்றும் ரோஜி மேத்யூ முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மலையாளத்தில் விமர்சன ரீதியாகப் பலரின் பாராட்டுகளை பெற்ற ஜிம்மி இ வீட்டின்ட ஐஸ்வர்யம்’ ‘ஐ ஆம் ஏ பாதர்’ என இரண்டு மலையாள படங்களை இயக்கிய ராஜு சந்திரா, தனது மூன்றாவது படமாக தமிழ்ப் படத்தை இயக்கியுள்ளார்!
கிராமத்து எதார்த்தத்தை, காதலுடன் காமெடி கலந்து, ஜனரஞ்சகமாக கதை எழுதி, ஒளிப்பதிவு செய்து, இயக்கியுள்ளார் ராஜூ சந்திரா. இசையை நவநீத் அமைக்க, கலையை வினோத் குமார் கையாண்டுள்ளார்.
விரைவில் திரைக்கு வர, தயாராகி வருகிறது “பிறந்தநாள் வாழ்த்துகள்”!
@GovindarajPro