அமிகோ கேரேஜ்
இயக்குனர் : பிரசாந்த் நாகராஜன்
நடிகர்கள் – மாஸ்டர் மகேந்திரன் , ஆதிரா
இசை : பாலமுரளி பாலு
தயாரிப்பாளர்கள் : முரளி ஶ்ரீனிவாசன்
ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளைஞன் , தன் படிப்பை முடித்து விட்டு அதற்கேற்ற வேலைக்கு சென்று ஒரு எதார்த்த மான வாழ்க்கை வாழ்ந்து வருகிறான், இப்படியான அவன் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக ஒரு சிக்கல் வருகிறது , அந்த சிக்கலை சரி செய்ய முயற்சிக்கும்போது அதை விட பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்கிறான், இந்த பிரச்சனையில் இருந்து தப்பித்து தன் வாழ்க்கையை வாழ்ந்தானா? இல்லை அந்தப் பிரச்சனையால் மாட்டிகொண்டு அவனது பாதை திரும்பியதா என்பதே மீதிக்கதை.
இந்தப் படத்தில் கதாநாயகன் இரண்டு பருவங்களில் நடிக்கிறார், ஒன்று பள்ளிப் பருவம் மற்றொன்று வேலைக்கு செல்லும் பருவம் இரண்டிற்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை , இரண்டு பருவத்தையும் தனித்து காட்ட எந்த முயற்சியும் எடுக்கவில்லை , அதுவே இந்தப் படத்தில் இருந்து நம்மை விளக்கி வைத்து விட்டது, அதற்கு எதாவது மெனக்கெடல் செய்திருக்கலாம், மற்றபடி படத்தில் மகேந்திரன் நடிப்பு நன்றாகவே இருந்தது ஒரு கதாநாயகனுக்கு தேவையான உடல்வாகு தோரணை என அனைத்தும் அவருக்கு நன்றாக பொருந்தியுள்ளது,
இந்தப் படத்தில் நடிகை ஆதிரா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், வெறும் நாயகியாக மட்டும் இல்லாமல் படம் முழுவதும் அவரும் ஸ்கோர் செய்துள்ளார், மற்ற நாயகிகளில் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர்,
இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் முரளிதரன் சந்திரன் மற்றும் தாசரதி நடித்துள்ளனர் , அவர்களின் மிரட்டல் பாணி இந்தப் படத்தில் நன்றாகவே பொருங்கியுள்ளது, மேலும் சக்தி கோபால் , முரளி கோபால், சிரிகோ உதயா போன்றவர்கள் தங்களது சிறப்பான நடிப்பினை கொடுத்துள்ளனர்,
இந்த ப்படத்தில் நடிகர் ஜி எம் சுந்தர் அமிகோ கேரெஜின் உரிமையாளராக நடித்துள்ளார் , அவரது கதாபாத்திரம் தொடக்கத்தில் சுமாராக இருந்தாலும் போகப்போக சூடு பிடித்தது , இயல்பான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துளார்,
இந்தப் படம் வழக்கமான ஆக்சன் படமாக உருவாக்கப்பட்டுள்ளது, படம் ஆங்காங்கே சில திருப்புமுனையையுடன் விறுவிறுப்பாக நகரும் வண்ணம் திரைக்கதையை உருவாக்கியுள்ளனர், இது போன்ற ஆக்சன் கதையை தூக்கி நிற்கும் அளவிற்கு மகேந்திரன் தயார் ஆனாலும் அதை ரசிகர்கள் ஏற்பதற்கு இன்னும் சில காலங்கள் ஆகும் என்றே கூற வேண்டும்,
இந்தப் படத்தில் ஒளிப்பதிவு மற்றும் இசை தான் படத்தை தாக்கியுள்ளது, சோலை முத்துவின் ஒளிப்பதிவில் ஆக்சன் காட்சிகள் நன்றாக இருந்தது, படத்திற்கு தேவையான பின்னணி இசையை பாலமுரளி கொடுத்துள்ளார், பாடல்கள் அனைத்தும் நன்றாகவே இருந்தது ,
மொத்தத்தில் இந்த அமிகோ கேராஜ் ஆக்சன் கலந்த அதிரடி படமாக வந்துள்ளது, கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்
Rating 2.7/5