எலக்சன்
இயக்குனர் – தமிழ்
நடிகர்கள் – விஜயகுமார், ப்ரீத்தி அஸ்ரானி, ஜார்ஜ் மரியன்
இசை – கோவிந்த் வசந்த்
தயாரிப்பு – ஆதித்யா
வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரில் ஒரு பிரமுகர் தமிழ்நாடு மக்கள் கட்சியின் தீவிர தொண்டனாக செயல்பட்டு வருகிறார், ஊரில் அவர் ஆதரவு அளிக்கும் வேட்பாளர் வெற்றி பெறுவார் ,அவருக்கு ஒரு இளம் வயது மகன் இருக்கிறார். ஒரு கட்டத்தில் அந்த அரசியல் பிரமுகர் தேர்தலில் சுயேட்சையாக நிற்கும் சூழல் ஏற்படுகிறது ஆனால் கூட்டணி கட்சி வேட்பாளருக்கு ஆதரவு கொடுத்து வெற்றிபெற வைக்கிறார். இது ஒருபுறம் இருக்க 2011ஆம் ஆண்டு தேர்தலில் அந்த அரசியல் பிரமுகரின் மகன் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் சூழல் உருவாகிறது. சுயேச்சையாக போட்டியிடும் அவனது வாழ்க்கையை அரசியல் எப்படி புரட்டிபோட்டது, இறுதியில் அவன் வெற்றி பெற்றானா என்பதே மீதிக்கதை.
தற்போது அரசியல் கருத்தை கொண்டு பல படங்கள் வந்துள்ளது, அந்த படங்களின் வரிசையில் இந்த படம் வித்தியாசமானது, நடராசன் என்ற கதாப்பாத்திரத்திற்கு விஜயகுமார் கணக்கச்சிதமாக பொருந்துகிறார். முதல் காதல் கைவிட்டு போகும் போதும், தன் மாமா பவெல் நவகீதன் முன் என் வாழ்க்கை இப்படி ஆனதற்கு காரணம் நீதான்யா என்று உடைந்து அழுது பேசும்போதும் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். கட்சியின் தீவிர தொண்டனாக இருந்து தலைவர் பதவிக்கு போட்டியிட ஆதரவு கேட்கும் ஜார்ஜ் மரியன், அங்கு அவமானத்தை சந்திப்பதும் அதை மனைவியிடம் கூறி கதறுவது நடைமுறையில் உள்ள அரசியலை பிரதிபலிக்கிறது.
படத்தின் முதல் பாதி காதல், அரசியல் களம் எனக்கு விறுவிறுப்பாக நகர்கிறது. இரண்டாம் பாதியில் வரும் ட்விஸ்ட் யாரும் எதிர்பாக்காது. தேர்ந்த அரசியல்வாதி கதாபத்திரத்தில் திலீபனும் மிரட்டியிருக்கிறார். பல காட்சிகள் கள அரசியலை காட்டுகின்றன. படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரத்தில் சிறப்புசிறப்பு.
ஒளிப்பதிவாளர் மகேந்திரன், குறிப்பிட்ட ஒரு வட்டத்திற்குள் தனது கேமராவை பயணிக்க வைத்திருந்தாலும், கதைக்கு ஏற்ப தனது பணியை சிறப்பாகவே செய்திருக்கிறார். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த் காட்சிகளுக்கு உயிரோட்டம் அளிக்கும் வகையில் பின்னணி இசையை கொடுத்து படத்திற்கு கைகொடுத்திருக்கிறார். பாடல்கள் நன்றாகவே இருந்தது,
இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்றது அதற்கு காரணம் கதானாயகன் விஜயகுமார் மற்றும் அவரது அரசியல் மையக்கருத்துக் கொண்ட இந்தப் படம் மேலும் அயொத்தி படத்தில் கலக்கியிருந்த ஹிந்தி நடிகை ப்ரீத்தி அஸ்ரானி, இவர்கள் இருவருக்கும் காட்சிகள் மிகச்சிறப்பு.படத்தில் வரும் ட்விஸ்ட்கள் அனைத்தும் நன்றாக இருந்தது.
மொத்தத்தில் இந்த ‘எலக்சன்’ படத்தின் ரிசல்ட் சிறப்பு.
Rating 3.5/5