ஹிட்லர் படம் எப்படி இருக்கு?

ஹிட்லர்

இயக்கம் – தனா
நடிகர்கள் – விஜய் ஆண்டனி, கௌதம் மேனன், ரியா
இசை – விவேக் மெர்வின்
தயாரிப்பு – T.D ராஜா, டி ஆர் சஞ்சய் குமார்

வேலைக்காக மதுரையில் இருந்து சென்னைக்கு வரும் ஒருவன் ரயில் நிலையத்தில் இறங்கும்போது ஒரு பெண்ணை பார்க்கிறான் பார்த்ததும் அந்தப்பெண்ணின் மீது காதல் கொள்கிறார். இவர்களது காதல் கதை ரயில் பயணத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அமைச்சரின் ரூ.400 கோடியை எடுத்துச் செல்லும் அவரது ஆட்களை கொலை செய்துவிட்டு அந்த பணத்தை மர்ம கும்பல் கொள்ளையடிக்கிறது. அந்த கும்பலை பிடிப்பதற்கான பொறுப்பு காவல்துறை அதிகாரி கெளதம் மேனனுக்கு வழங்கப்பட, அவரது விசாரணையில் அதிர்ச்சிகரமான உண்மை தெரிய வருகிறது. அது என்ன?  என்பது தான் ‘ஹிட்லர்’.

விஜய் ஆண்டனியின் கதை தேர்வை பற்றிய ஒரு குற்றச்சாட்டு இருந்தது ஆனால் இந்தப் படத்தில் கதைகளை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டுவதோடு, தனது தோற்றத்தையும் மாற்றிக்காட்டும் முயற்சிகளில் விஜய் ஆண்டனி ஈடுபட்டுள்ளார். ஒரு நாயகனாக விஜய் ஆண்டனி தனது கதாபாத்திரத்தை கச்சிதமாக கையாண்டு, காதல் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளில் எந்தவித குறையும் இல்லாமல் நடித்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ரியா சுமனுக்கு வழக்கமான கமர்ஷியல் கதாநாயகி வேடம் தான். அதை குறையில்லாமல் செய்திருக்கிறார். காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் கெளதம் மேனன், தனது வழக்கமான பாணியில் தனது கதாபாத்திரத்திற்கு மட்டும் இன்றி திரைக்கதை ஓட்டத்திற்கும் பலம் சேர்த்திருக்கிறார். அவரது கதாபாத்திரம் மற்ற படங்களை காட்டிலும் இந்தப் படத்தில் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது,  நீண்ட இடைவெளிக்குப் பிறகு வில்லனாக நடித்திருக்கும் சரண்ராஜ், அவரது தம்பியாக நடித்திருக்கும் தமிழ், ஆடுகளம் நரேன், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா ஆகியோர் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்

விவேக் – மெர்வின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சிறப்பாக இருந்தது , பின்னணி இசை படத்திற்கு ஒரு பெரிய பலத்தை கொடுத்துள்ளது, .ஒளிப்பதிவாளர் நவீன் குமார்.ஐ, லைவ் லொக்கேஷன்களில் காட்சிகளை படமாக்கிய விதம் படத்திற்கு சிறப்பு சேர்த்திருப்பதோடு, நீண்ட நாட்களுக்குப் பிறகு மின்சார ரயிலில் காதல் பயணத்தை காட்சிப்படுத்தியது கூடுதல் சிறப்பு, வழக்கமான கமர்ஷியல் ஆக்‌ஷன் கதை என்றாலும் தன்னால் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்திருக்கிறார் படத்தொகுப்பாளர் சங்கத்தமிழன்.இ.

மக்கள் பிரச்சனையை கருவாக வைத்துக்கொண்டு கமர்ஷியல் ஆக்‌ஷன் ஜானரில் திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் தனா காதல் சண்டை சஸ்பென்ஸ் என அனைத்தும் கலந்த ஒரு படத்தை அளித்துள்ளார், விஜய் ஆண்டனி, ரியா சுமன் இடையிலான காதல், ஆக்‌ஷன் மற்றும் கெளதம் மேனனின் மூலம் படம் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது,

மொத்தத்தில், இந்த ‘ஹிட்லர்’ ஹிட் தான்

Rating 3/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *