” ஃபயர் ” படம் எப்படி இருக்கு?

இயக்குனர் – JSK சதீஷ் குமார்.
நடிகர்கள் – பாலாஜி முருகதாஸ், ரச்சிதா , சாந்தினி .
இசை – டி கே
தயாரிப்பு – JSK சதீஷ் குமார்

ஒரு இளைஞன் காதல் என்ற பெயரில் பல பெண்களை மயக்கி அவர்களுடன் உடலுறவு கொள்வது மட்டுமில்லாமல் அதனை வீடியோஎடுத்து மிரட்டி பணம் பறிப்பது வீடியோவை இணையத்தில் வெளியிடுவது போன்ற செயல்களை செய்து வருகிறான், இவனது வலையில் ஒரு பெண் விழுந்து விடுகிறாள் , அவளால் இவனுக்கு என்ன ஆனது, இறுதியில் அவன் பிடிபட்டானா இல்லையா என்பதே இப்படத்தின் கதை .

உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நாகர்கோவிலில் காசி என்ற இளைஞர் பல இளம் பெண்களை காதலித்து ஏமாற்றி அவர்களின் அந்தரங்க வீடியோக்களை வைத்து மிரட்டி பணம் பறித்த சம்பவம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது சிறையில் இருக்கும் காசியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் .

இந்தப் படத்தில் முழுக்க முழுக்க நெகட்டிவ் ஷேட் இருக்கும் கதாபாத்திரம் என்றாலும் தைரியமாக முன் வந்து நடித்துள்ளார் நாயகன் பாலாஜி . காசி என்ற கதாபாத்திரத்தில் பெண்களை தன் காதல் வலையில் விழ வைத்து அவர்களை ஏமாற்றும் ஒரு மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாலாஜி முருகதாஸ். முதல் பாதியில் சாந்தமாக ஒரு அமைதியான பையனாகவும், இரண்டாம் பாதியில் கொடூர வில்லனாகவும் நல்ல நடிப்பை கொடுத்துள்ளார். படத்தில் சாந்தினி தமிழரசன், சாக்ஷி அகர்வால், ரச்சிதா மகாலட்சுமி, காயத்ரி ஷான் என பல பெண் கதாபாத்திரங்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரம் உள்ளதால் அதனை உணர்ந்து நடித்துள்ளனர்.

இவர்களை தாண்டி படம் முழுக்க இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சதீஷ் ஒரு போலீஸ் அதிகாரியாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களை தாண்டி சிங்கம் புலி, சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோரும் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தப்படத்திற்கு சதிஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், நடிகர்களின் உணர்வுகளை சிறப்பாக நம்மிடம் கடத்தியுல்லார், படத்திற்கு இசை ஒரு பலம் என்றுதான் சொல்ல வேண்டும். ,பாடல்கள் சிறப்பாக இருந்தது. படத்தில் ஒரு பல காட்சிகள் நன்றாக இருந்தது. குறிப்பாக ஆரம்பத்தில் ரச்சிதாவின் வாழ்க்கை, ஆபாச படங்களை எப்படி மறைத்து வைக்கின்றனர், கிளைமாக்சிக்கு முந்தைய விசாரணை காட்சிகள் ஆகியவை நன்றாக எடுக்கப்பட்டு இருந்தது.

பெண்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து பணம் பறிக்கும் நபர்களை பற்றி ஒரு விழிப்புணர்வை உருவாக்க இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் JSK சதிஷ் , இந்தப் படம் பலருக்கு நல்ல பாடமாக இருக்கும்.

மொத்தத்தில் இந்த ” ஃபயர் ” திரில்லர் நிறைந்த ஒரு அறிவுரை.

Rating 3.8/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *