அஞ்சாமை படம் எப்படி இருக்கு?

அஞ்சாமை

இயக்குனர் – எஸ் பி சுப்பராமன்
நடிகர்கள் – விதார்த் ,வாணி போஜன்,ரஹ்மான்
இசை – ரஷாந்த் அர்வின்
தயாரிப்பு – கோவை எஸ் பி மோகன்ராஜ்

ஒரு சாதாரண பூ வியாபாரியின் மகன் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநிலத்தில் முதல் மானவனாக வெற்றியடைகிறான். தனது மகனை எவ்வளவு சிரமப்பட்டாலும் மருத்துவ படிப்பில் சேர்த்து மருத்துவராக்க வேண்டும் என ஆசைப்படுகிறான் , இன்னிலையில் கஷ்டப் பட்டு அவனை நீட் தேர்வின் கோச்சிங்கில் சேர்க்கிறான் ,எனினும் நடைமுறையில் இருக்கும் சில சிக்கள்கலால் அவனால் மருத்துவப்படிப்பில் சேர முடியாமல் போய் விடுகிறது, இன்னிலையில் தன் மகனை மருத்துவப் படிப்பில் சேர்த்தாரா இல்லையா என்பதே இப்படத்தின் மீதிக் கதை.

நீட் விவகாரம் பல சர்ச்சையை நம் மாநிலத்தில் நிகழ்த்தியுள்ளது அதனை இந்தப் படத்தில் தெளிவாக விளக்கியுள்ளனர், இதில், சர்க்கார் நிறைவான கதாபாத்திரத்தை கொடுத்து இருக்கிறார். இது படத்தின் முதல் பாதியில் பெரிய பலமாகவே மாறியுள்ளது. மகனின் வாழ்க்கைக்காக தனக்கு பிடித்த தொழிலைவிட்டு வருவது, தனது மகனுக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்கும் ஒரு சராசரி அப்பாவாவாக நடித்திருக்கிறார் விதார்த். படத்தின் மொத்த கதையை தனது தோளில் சுமந்துள்ளார். விதார்த்தின் மனைவியாக இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்துள்ள வாணி போஜன், தனது கதாபாத்திரம் உணர்ந்து நிறைவான நடிப்பை தந்துள்ளார்.

முதல் பாதியில் தந்தை மகன் பாசம் நீட் என படம் சென்ற பின் இயக்குநர் இரண்டாம் பாதியில் ரஹ்மானுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார். தொடர்ந்து நீதிமன்றத்தில் அவர் கேட்கும் கேள்விகள் எல்லாம் நியாயமானதாக இருந்தாலும், தொடர்ந்து அதே போன்று காட்சி வருவதை குறைத்து இருக்கலாம்.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ராகவ் பிரசாத் இசையமைத்துள்ளார், தந்தை மற்றும் மகனுக்கு இடையே உள்ள பாசத்தை எடுத்துரைக்கும் பாடல் நன்றாக இருந்தது, ஒளிப்பதிவாளர் கார்த்திக் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார், படத்திற்கு தேவையான அளவு உழைப்பை கொடுத்துள்ளார், சில காட்சிகள் நன்றாக படமாக்கப்பட்டது,

ஒரு எளிய குடும்பத்தை சேர்ந்த ஒரு மாணவனின் மருத்துவ கனவு இன்றைய காலகட்டத்தில் எவ்வாறு தகர்க்கப்படுகிறது என்பதை தந்தை மகன் உறவு மூலம் சொல்லி நம்மை கலங்கடித்து விட்டார் இயக்குனர்,இன்றும் தமிழகம் நீட் தேர்வுடன் எவ்வாறு போராடுகிறது? என்பதை இயக்குனர் கூறியுள்ளார்.

மொத்தத்தில் இந்த அஞ்சாமை மருத்துவத்தேர்வின் பாடம்

Rating 3/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *