“ஆடவர்” திரைப் படத்தின் தயாரிப்பாளரும், ‘மக்கள் செயல் பேரவை’ தலைவருமான சொ.சிவக்குமார் பிள்ளை மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து எழுதியுள்ள கட்டுரை!

என் அன்பு சகோதரர்களுக்கு வணக்கம்…..

சிங்கம் இல்லா காட்டுக்குள் நரி நாட்டாண்மை பண்ணுவதுபோல் ஆளுமை இல்லா தமிழகத்தில் காசுக்காக, பதவி சுகத்துக்காக ஆட்சியில் இருக்கும் முதல் அமைச்சர் முதல் சட்டமன்ற உறுப்பினர்வரை ஆளும்கட்சி என்று சொல்லிக்கொண்டு அவர்கள் செய்வதை பார்த்ததால் தமிழக மக்களை வேதனையில் விழி பிதுங்க வைக்கிறார்கள்…..
கடந்த மூன்றுமாதமாக கொரனவை ஒழிக்கிறோம் நீங்கள் வீட்டில் இருங்கள் என்று சொன்னார்கள் கொரானாவின் தாக்கம் குறைந்ததாக தெரியவில்லை….
கோவில்களின் கதவுகளை இழுத்து மூடிவிட்டு மதுக்கடைகள் கதவுகளை திறந்து காசு பார்க்க போகிறார்கள் ….
கொரானாவின் காற்றும் குறையாது ….
மதுவின் நாற்றமும் குறையாது ….

உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன் ….

நம் கிராமங்களில் இருப்பவர்களை மதுக்கடைக்கு போகவிடாதீர்கள் ….
மது குடிப்பவர்களை அழித்துவிடும்….
கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை கொள்ளும் விஷம் என்று தெரியாமல் குடிக்கிறார்கள்.

இந்த நேரத்தில் மதுக்கடைக்கு போவதால் கொரானாவின் தாக்கம் அவர்களுக்கு வந்து அவர்களுக்கு மட்டுமல்லாது அவர்கள் குடும்பத்தையே பாதிக்கும்….

இந்த நேரத்தில் வீட்டில் இருக்கும் இளைஞர்களும், தாய்மார்களும் கவனமாக இருக்கவேண்டும் ….
உங்கள் இடத்தில் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்….

யாரையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பாதீர்கள்.

மதுவை குடிப்பதற்கு அனுமதிக்காதீர்கள் ….

மது குடிப்பதினால் நம்மையும் நம்மை சார்ந்தவர்களையும் காலம் முழுவதும் கவலை படும்படி செய்துவிடும்….

மதுவை தவிர்ப்போம்…

மகத்தான வாழ்வை தொடர்வோம்….

நன்றி வணக்கம்…..

பணிவுடன்…

சொ. சிவக்குமார் பிள்ளை

தலைவர்

மக்கள் செயல் பேரவை
பட்டுக்கோட்டை தொகுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *