காடுவெட்டி
இயக்குனர் : சோலை ஆறுமுகம்
நடிகர்கள் – ஆர் கே சுரேஷ், சுப்ரமணிய சிவா, முருகதாஸ்
இசை : சாதிக்
தயாரிப்பாளர்கள் : சோலை ஆறுமுகம், சுபாஷ் சந்திரபோஸ்.
ஒருவர் தனது ஊரில் நடக்கும் அநீதிகளை தட்டிக்கேட்கிரார், குறிப்பாக பெண்களுக்கு நடக்கும் அநீதிக்காக குரல் கொடுக்கிறார், அதற்காக கொலையும் செய்து அவ்வப்போது ஜெயிலுக்கு செல்கிறார், பொது மக்களின் போராட்டம் ஆகியவற்றிற்கு குரல் கொடுக்கிறார், பெண் பிள்ளைகள் தைரியத்தொடு இருக்க வேண்டும் அதற்காக அரிவாலையும் எடுக்கலாம் என்று கையில் அரிவாள் கொடுக்கிறார், இப்படி இருக்க அந்த ஊரில் சாதி விட்டு சாதி மாற்றி திருமணம் செய்தால் அவர்களை கொலை செய்ய வேண்டும் என்ற ஒரு வழக்கத்தை கொண்டுள்ளனர், அப்படி ஒரு பெண் வேறொரு சாதியை சேர்ந்த ஒருவனை காதலிக்கிறாள், அந்தப் பெண்ணின் தந்தையாக சுப்ரமனிய சிவா நடித்துள்ளார் , அந்தப் பெண்ணை தந்தையே கொலை செய்தாரா இல்லை காதலை ஏற்றுக் கொண்டார்களா , இதற்கு நாயகன் என்ன செய்கிறார் என்பதே இப்படத்தின் மீதிக்கதை.
இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஆர் கே சுரேஷ் இது ஒரு சாதிய படம் இல்லை என்று கூறினார், ஆனால் படம் முழுக்க சாதிய குறியீடுகள் உள்ளன, நிறத்திலிருந்து அனைத்திலும் சாதியை தூக்கிப் பிடித்துள்ளனர், ஒரு சமூகத்தை தூக்கி பிடிப்பதாக கூறி அந்த மக்களை இறக்கி விட்டார்,
இந்தப் படத்தில் நாய்கன் ஆர் கே சுரேஷ் ஒரு நெகடிவ் கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளார் , தனக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார், இந்தப் படமும் நாடக காதல் போன்ற விஷயங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது,
நாடகக் காதல் என்பதை பற்றி பலரும் பேசுகிறார்கள் ஆனால் அதற்கு எவரும் தெளிவான விளக்கத்தை கூறுவதில்லை , இந்தப் படமும் அப்படித்தான் , கலப்பு திருமணம் நாடகக்காதல் என அனைத்தும் இந்தப் படத்தில் நடக்கிறது ஆனால் அதற்காக பின்னணி காரண காரியம் எதையும் சொல்லாமல் மேம்போக்காக காட்டியுள்ளனர்,
இந்தப் படத்தில் தெருக்கூத்து கலைஞராக சுப்ரமணிய சிவா நடித்துள்ளார், ஊருக்காக தன் சொந்த மக்களை இழக்கும் சூழ்நிலை வருகிறது , அந்த காட்சியில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டியுள்ளார், படத்தில் நடித்துள்ள முருகதாஸ் மற்றும் ஆதிரா, விபின் போன்ற. அனைவரும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை சரியாக நடித்துள்ளனர்,
இந்தப் படத்தில் ஒளிப்பதிவும் பாடல்களும் படத்திற்கு பெரிதாக கை கொடுக்கவில்லை , படத்தை நகர்த்தி செல்ல மட்டுமே பயன்படுகிறது, படம் டெக்னிகலாக மிகவும் பின் தனி இருக்கிறது, சில இடங்களில் லாஜிக் இல்லை , திரைக்கதையில் இன்னும் சில மெனக்கெடல் தேவைப் படுகிறது,
மொத்தத்தில் இந்த ‘ காடுவெட்டி ‘ பெண்களை தொட்டால் பெண்களே வெட்ட வேண்டும், ஆனால் வேறொரு சாதியை சேர்ந்தவனை காதலித்தால் அந்த பெண்ணையே வெட்ட வேண்டும் என்ற எதிர்மறை கருத்துகளை கொண்டுள்ளது,
Rating 3/5