கார்டியன்
இயக்குனர்- குரு சரவணன்
நடிகர்கள் – ஹன்சிகா மோத்வானி , ப்ரதீப் ராயன் , ஸ்ரீ மான்.
இசை – சாம் சி எஸ்
தயாரிப்பு – ஃபில்ம் வொர்க்ஸ்
ஒரு பெண் தன் சிறு வயதிலிருந்தே அதிர்ஷ்டம் இல்லாமல் பல சிக்கள்களை அனுபவித்து வருகிரால் , அவள் ஆழ் மனதில் தனக்கு அதிர்ஷ்டம் இல்லை என்றும் பதிந்து விடுகிறது, இதனால் அவளது சாதாரண வாழ்வும் பாதிப்படைகிறது, ஒரு நாள் திடிரென்று அவள் நினைக்கும் அனைத்தும் அவளுக்கு நடக்கிறது , அந்த அதிர்ஷ்டம் மற்றவர்களுக்கு ஆபத்தாகவும் மாறுகிறது , தனக்கு கிடைத்திருப்பது சாபமா இல்லை வரமா என்று தெரியாமல் குழம்புகிராள் இதன் பின் அவள் வாழ்வில் என்ன ஆனது அவளுக்கு எப்படி இந்த அதிர்ஷ்டம் கிடைத்தது என்பதே மீதிக்கதை !
ஒரு ஹாரர் படத்திற்கு தேவையான கதை இருக்கிறது ஆனால் திரைக்கதை போதவில்லை ,அமானுஷ்ய படங்களுக்கான ரெகுலர் பார்மட்டில் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் குரு சரவணன், சபரியுடன் இணைந்து இயக்கவும் செய்திருக்கிறார். இன்னும் பழைய பேய் பட பாணியை தான் பயன்படுத்தியுள்ளனர் , அதிக சத்தம் இருட்டு இதை விட்டு புதிதாக ஏதாவது முயற்சி செய்திருக்கலாம்,
மொத்த படத்தின் சுமையையும் நடிகை ஹன்சிகா தான் சுமந்திருக்கிறார். படத்தின் முதல் பாதியில் ஒரு கதாபாத்திரமாகவும் அடுத்த பாகத்தில் வேறொரு கதாபாத்திரமாகவும் நம் மனதில் பதிந்துள்ளார், ஆனால் அதற்கேற்ப திரைக்கதை இல்லை , இது போல பல படங்கள் வெளியாகியுள்ளது ,
இந்தப் படத்தில் ஹன்சிகாவிற்கு நாங்கு வில்லன்கள் எனினும் பிரதீப் ராயன், சுரேஷ் மேனன், ஸ்ரீமன், ஸ்ரீராம் பார்த்தசாரதி ஆகிய நான்கு பேரும் வழக்கமான வில்லன்களாக நடித்திருக்கிறார்கள். தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை செய்துள்ளனர்.
படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களான மொட்டை ராஜேந்திரன், டைகர் கார்டன் தங்கதுரை ஆங்காங்கே நகைசுகை செய்ய முயற்சி செய்துள்ளனர். ஆனால் அதுவும் அதிகமாக எடுபடவில்லை, ஒரு சில இடங்கள் நகைச்சுவை நன்றாக இருந்தது, அபிஷேக் வினோத், ஷோபனா பிரனேஷ், தியா, ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை செய்துள்ளனர்.
படத்தில் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றது போல இருக்கிறது , இந்தப் படத்திற்கு கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார், சாம்.சி.எஸ்-ன் இசை படத்தின் நகர்விற்கு உதவியுள்ளது . பாடல்கள் கதைக்கு தேவையானதை கொடுத்துள்ளது ,
படம் ஆரம்பத்தில் நல்ல தொடக்கமாகவே இருந்தது ஆச்சர்யம் நிறைந்த சூழலாக இருந்தாலும் அதன் பின் ஒரு சாதாரண பேய் பட பானியில் முடுந்து விட்டது.
மொத்தத்தில், ‘கார்டியன்’ யாரை காப்பாற்ற போகிறது என்று பார்ப்போம்.
Rating 3/5