‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ இசை வெளியீட்டு விழா!

‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ இசை வெளியீட்டு விழா!

உலகங்கெங்கும் சினிமா ரசிகர்களாலும் அனைத்து வயதினராலும் கொண்டாடப்படுபவரும்; நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத் திறமையாளரான தனுஷ் அவர்கள் எழுத்து மற்றும் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. இத்திரைப்படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ராபியா கதூன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த்
ஷங்கர்,R சரத்குமார்,
சரண்யாபொன்வண்ணன்,
‘ஆடுகளம்’ நரேன்,
உதய் மகேஷ்,
ஶ்ரீதேவி உள்ளிட்ட மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. தனுஷின் ஆஸ்தான தொழில்நுட்ப குழுவான G V பிரகாஷ் இசையமைக்க, லியான் பிரிட்டோ ஒளிப்பதிவில், பிரசன்னா G K படத்தொகுப்பில், ஜாக்கி கலை இயக்கத்தில், ‘பாபா’ பாஸ்கர் நடன இயக்கத்தில் பிப்ரவரி-21 அன்று வெளியாக உள்ளது.
இந்நிலையில் படக்குழு படத்தை விளம்பரபடுத்தும் நோக்கில் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தது. படத்தின் டிரெய்லர் நேற்று (10-02-25) வெளியானது.

அடுத்ததாக இன்று(11-02-25) படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்.ஜே.சூர்யா, அருண் விஜய், இயக்குனர்கள் செல்வராகவன், கஸ்தூரி ராஜா, விக்னேஷ் ராஜா,ராஜ்குமார் பெரியசாமி, தமிழரசன் பச்சமுத்து, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்டோருடன் படத்தின் முக்கிய நடிகர்கள் மற்றும் சரண்யா பொன்வண்ணன், பாடலாசிரியர் விவேக், கலைஇயக்குனர் ஜாக்கி, ஒளிப்பதிவாளர் லியான் பிரிட்டோ, பாடகி சுபலாஷினி உள்ளிட்ட படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.

ஸ்ரேயாஸ் ஶ்ரீனிவாசன்

முதலாவதாக வுண்டர்பார் நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ஸ்ரேயாஸ் ஶ்ரீனிவாசன் வரவேற்று பேசும்பொழுது,”தனுஷ் அவர்கள் ‘துள்ளுவதோ இளமைக்கு எப்படி ஆதரவளித்தீர்களோ, அதே போல இந்த இளம் நடிகர்களுக்கும் ஆதரவளிக்க வேண்டும்’ என கேட்டுக் கொண்டார். GV பிரகாஷ் குமார் பாடல்கள் மற்றும் சிறப்பான பின்னணி இசையை தந்து இந்த படத்தின் முதுகெலும்பாக திகழ்கிறார். தனுஷ் அவர்களின் நட்பிற்காக வந்து சிறப்பித்த அனைத்து சிறப்பு அழைப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்”, என கூறினார்.

எஸ்.ஜே.சூர்யா

இயக்குனர் மற்றும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா,” படம் சிறப்பாக வந்துள்ளது, படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். திரைத்துறையில் நடிகர்கள் பற்றாக்குறை உள்ளது; தனுஷ் அவர்கள் ஒரு பட்டாளத்தையே தயார் செய்து அனுப்பி வைத்துள்ளார். ஒரே சமயத்தில் இரு வேறு விதமான கதைக்களங்களைக் கொண்ட படங்களை எடுக்கும் இயக்குனராகவும், ஹாலிவுட் வரைக்கும் சென்ற தலைசிறந்த நடிகராகவும் விளங்குகிறார். படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்”, என்றார்.

ராஜ்குமார் பெரியசாமி

அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி பேசும்பொழுது,”தனுஷ் அவர்கள் எப்படி இவ்வளவு விரைவாக அடுத்தடுத்த படங்களில் இயக்கம் மற்றும் நடிப்பு என்று பரபரப்பாக இருப்பதனால் ஒரு மகா கலைஞனாக விளங்குகிறார். படத்திற்கு GV பிரகாஷ் சிறப்பாக இசையமைத்துள்ளார். படக்குழுவிற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்”, என வாழ்த்தினார்.

விக்னேஷ் ராஜா

விக்னேஷ் ராஜா பேசும்போது,” இளம் திறமையாளர்களுக்கு எப்பொழுதும் ஆதரவளிப்பவர் தனுஷ் அவர்கள் இந்த படக் குழுவும் அப்படியே உள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொள்ள வாய்ப்பளித்த அவருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஜிவி பிரகாஷ் குமார் அவர்கள் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. படம் வெற்றியடைய வாழ்த்துக்கிறேன்” என பேசினார்.

தமிழரசன் பச்சமுத்து

தமிழரசன் பச்சமுத்து பேசும்பொழுது,”தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் ‘லப்பர் பந்து’ படத்தை பார்த்துவிட்டு கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியடையும் என்று வாழ்த்தினார். அதேபோல ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ பேசப்படக்கூடிய மற்றும் ஜாலியான திரைப்படமாகவும் இருக்கும் என கூறினார். அவர் கூறியபடி அனைத்தும் நடக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.

அருண்விஜய்

அருண் விஜய் வாழ்த்தி பேசும் பொழுது,”சகோதரர் தனுஷ் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும் பன்முகத் திறமையாளர். இளைஞர்களை கவரும் விதத்தில், GV பிரகாஷ் சிறப்பான இசையை தந்துள்ளார். படத்தில் நிறைய இளம் திறமையாளர்களுக்கு தனுஷ் வாய்ப்பளித்துள்ளார் அவர்களையும் வாழ்த்துகிறேன்”, என்றார்.

சரண்யா பொன்வண்ணன்

நடிகை சரண்யா பொன்வண்ணன் பேசும் பொழுது,”நடிகர் தனுஷ் அவர்கள் என்னை அவரது அம்மாகவே நினைப்பவர். படத்தில் நடிக்கும் அனைவரையும் சிறப்பாக கவனித்துக் கொள்ளக் கூடியவர். இன்றும் என்னிடம் ‘நாயகன்’ திரைப்படத்தைப் போல ‘விஐபி’ திரைப்படத்தை பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல எனக்கு இந்த திரைப்படமும் படக்குழுவும் சிறப்பாக அமைந்தது”, என கூறினார்.

ஜி வி பிரகாஷ் குமார்

படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பேசும்பொழுது,”தனுஷ் அவர்கள் இளமையான கதையம்சம் கொண்ட திரைப்படம் என கூறியதால், அதற்கேற்றவாறு இளமை ததும்பும் மாற்று இசையை இப்படத்திற்காக உருவாக்கினோம்.அவருடன் இணைந்து பயணிப்பது சிறப்பான அனுபவம். அவருடைய இயக்கத்தில் முதன்முறையாக இசையமைத்தது புதிய அனுபவமாக இருந்தது.

அதே போல பாடலாசிரியர் விவேக், கலை இயக்குனர் ஜாக்கி, ஒளிப்பதிவாளர் லியான் பிரிட்டோ, பாடகி சுபலாஷினி மற்றும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்திரங்களில் நடித்த பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், வெங்கடேஷ் மேனன், ராபியா கதூன், ரம்யா ரங்கநாதன் ஆகியோர் தாங்கள் பணியாற்றிய அனுபவத்தையும், இந்த மிகப்பெரிய வாய்ப்பு அளித்த தனுஷ் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டதோடு, பிப்ரவரி 21-ஆம் தேதி வெளியாகும் இத்திரைப்படத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.

தொடர்ந்து படத்தின் இசை வெளியிடப்பட்டு, குழு புகைப்படத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

நடிகர்கள்:
பவிஷ் நாராயண்
அனிகா சுரேந்திரன்
மேத்யூ தாமஸ்
பிரியா P வாரியர்
வெங்கடேஷ் மேனன்
ரம்யா ரங்கநாதன்
சித்தார்த்தா ஷங்கர்
ராபியா கதூன்
R சரத்குமார்
சரண்யாபொன்வண்ணன்
ஆடுகளம் நரேன்
உதய் மகேஷ்
ஶ்ரீதேவி

படக்குழு:
எழுத்து மற்றும் இயக்கம்: தனுஷ்
தயாரிப்பு : கஸ்தூரி ராஜா & விஜயலக்ஷ்மி கஸ்தூரி ராஜா
தயாரிப்பு நிறுவனம் : வுண்டர்பார் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்
இசை : GV பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு : லியான் பிரிட்டோ
படத்தொகுப்பு : பிரசன்னா G K
கலை இயக்கம் : ஜாக்கி
நடன இயக்கம் : பாபா பாஸ்கர், மொயின், சுரேன் R & பிரசாந்த்
ஆடை வடிவமைப்பு : காவ்யா ஶ்ரீராம்
ஆடைகள் : நாகு
ஒப்பனை : B ராஜா
படங்கள் : முருகன்
விளம்பர வடிவமைப்பு : கபிலன் செல்லையா
ஒலி வடிவமைப்பு : ஸிங்க் சினிமா
தயாரிப்பு நிர்வாகி : D. ரமேஷ் குச்சிராயர்
நிர்வாக தயாரிப்பாளர் : ஸ்ரேயாஸ் ஶ்ரீனிவாசன்
மக்கள் தொடர்பு: ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ்

சினிமால அசால்டா பண்றாரு தனுஷ்..! SJ Suryah Speech NEEK Movie Audio Launch | NEEK Trailer

தனுஷ் Vera Level-ல் திறமைசாலி ..! Arun Vijay Speech NEEK Movie Audio Launch | NEEK Trailer

தனுஷ் வெற்றிக்காக ரொம்ப கஷ்டப்படுறார்..! Saranya Ponvannan Speech NEEK Audio Launch | NEEK Trailer

உள்ள வந்த உடனே பக்குனு ஆயிடுச்சு.! Dhanush Sister Son Pavish Speech NEEK Audio Launch | NEEK Trailer

Dhanush Sir கூட தான் வேலை பார்க்கணும்.! Priya Prakash Varrier Speech NEEK Audio Launch

இளமையான மியூசிக் இந்த படத்தில்..! GV Prakash Speech NEEK Audio Launch | NEEK Trailer

❤️ ஐ லவ் யூ சொன்ன ரசிகர்..! வெட்கப்பட்ட Anikha Surendran Speech NEEK Audio Launch

Dhanush Sir மகா கலைஞன்..! Rajkumar Periasamy, Vignesh Raja, Tamizharasan Pachamuthu – NEEK

நடிக்கும் போது FUN பண்ற மாதிரி இருந்துச்சு..! Rabiya Khatoon, Ramya Ranganathan Speech NEEK Trailer

Golden Sparrow மேடையில் பாடி அசத்திய Singer Sublahshini .. NEEK Audio Launch

🔴LIVE _ நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் இசை வெளியீட்டு விழா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *