நெறிக்கப்படும் அறநெறி
மாணவர்களிடையே
கஞ்சா புழக்கம்
கவலை இல்லை!
மாணவர்கள்
போதைப் பழக்கத்துக்கு அடிமை கவலையில்லை!
சக மாணவியை
நண்பர்களோடு மாணவன்
பாலியல் பலாத்காரம்
கவலையில்லை!
ஆசிரியர்
மாணவிக்கு
பாலியல் தொல்லை
கவலை இல்லை!
மாணவிகள் விடுதியில்
மாணவி மரணம்
தற்கொலையா, கொலையா?
விடை தெரியவில்லை
கவலை இல்லை!
வகுப்பறையில்
ஜாதி வெறியில்
சக மாணவனை
ஆயுதம் கொண்டு தாக்குதல்
கவலை இல்லை!
இதற்கெல்லாம்
பொங்கியல்லாத
சில சமூக அக்கறையாளர்கள்
பள்ளியில்
ஆன்மீகம் போதித்தவரை
தீவிரவாதி போல் சித்தரிப்பதுதான்
இன்றைய நாட்டின் நிலைமை!
எத்தனையோ பள்ளிகளில் எத்தனையோ அவலங்கள் நடந்திருக்கிறது
அங்கெல்லாம்
தலைமை ஆசிரியர் இடமாற்றம் செய்யப்படவில்லை!
ஆன்மீக சொற்பொழிவுக்கு அனுமதித்த காரணத்தினால்
இங்கே
தலைமை ஆசிரியர்
இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்!
சொற்பொழிவில்
சிறு சிறு குறை இருக்கலாம்
அதற்காக
ஆன்மீகத்தையே
அகற்ற நினைப்பது,
இழிவு படுத்துவது
நீதிநெறியின்
கழுத்தை நெறிப்பதற்கு சமம்!
காலில் கட்டி என்றால்
கழுத்தை வெட்டுவதற்கு சமம்!
பள்ளிகளில்
நீதி போதனை வகுப்பில்லை, ஆத்திச்சூடி இல்லை, ஆசிரியர்களுக்கு கண்டிக்க அனுமதியில்லை,
தண்டிக்க உரிமை இல்லை
நெறிபட வாழ
உரையாற்றினால்
வழிமறிக்க ஆயிரம் கூட்டம்!
தமிழ்நாட்டில்
நாத்திகவாதி அற்பம்தான் !
நாத்திகவாதி என்ற பெயரில்
இந்து விரோதிகள்தான் அதிகம்!
இவர்களுக்கு
உயிர்த்தெழுதல் முழு நம்பிக்கை!
மறுபிறவி மூடநம்பிக்கை!
பாவமன்னிப்பு ஏற்புடையது,
பாவத்திற்கு தண்டனை ஏமாற்றுவது!
சொற்பொழிவில்
குறை இருந்தால்
அதை அறிவுறுத்துவதும்,
அறிவுரை கூறுவதும் தான் அமைச்சரின் செயல்பாடாக இருந்திருக்க வேண்டும்!
சீற்றம் கொள்வது,
ஆசிரியரை மாற்றுவது,
சவால் விடுவது,
இது போன்ற செயல்கள் அமைச்சருக்கு அழகில்லை!
யாரையோ குளிர்விக்க
எவரையும் சூடாக்காதீர்கள்!
பேரரசு