வைரமுத்துபாடல்கள் எழுதபனைமரத்தின் பலன்களை கூறும் படம்” பனை “

வைரமுத்து
பாடல்கள் எழுத
பனைமரத்தின் பலன்களை கூறும் படம்
” பனை “
———————————————– தமிழ்நாட்டில் மீண்டும் பனைத் தொழில் வளர வேண்டும்,பனையால் கிடைக்கும் பலன்கள் அனைத்தும் மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் உருவாக்கப்பட்ட படம் பனை.

ஏ.எம்.ஆர் கிரியேஷன்ஸ் சார்பில்
எம். ராஜேந்திரன் கதை எழுதி தயாரித்திருக்கிறார்

இப்படத்தில் கதையின் நாயகனாக ஹரீஷ் பிரபாகரன், நாயகியாக மேக்னா நடிக்க வடிவுக்கரசி,அனுபமா குமார், கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, டி.எஸ்.ஆர், லாலா கடை புகழ் ரிஷா ஜேக்கப் மற்றும் பலர் நடிக்க பனை படம் உருவாகியுள்ளது.

பாடல்கள் – வைரமுத்து
இசை – மீராலால்

நடனம்- தினா
தயாரிப்பு நிர்வாகம்- M.சிவகுமார்
மக்கள் தொடர்பு-வெங்கட்

ஒளிப்பதிவு-
சிவக்குமார் ரங்கசாமி

இணைத்தயாரிப்பு-
ஜெ.பிரபாகரன்

கதை தயாரிப்பு-
எம்.ராஜேந்திரன்

திரைக்கதை வசனம் இயக்கம்-
ஆதி.பி.ஆறுமுகம்

இப்படத்தில் மூன்று பாடல்கள் மிக சிறப்பாக வைரமுத்து பாடல் வரிகளில் சிறப்பாக அமைந்துள்ளது

பனமரம் பனைமரம்
பணங்காய்க்கும் பனமரம்
பசிதீர்க்கும் மரமய்யா
பனமரம்
இது நம்ம பண்பாட்டில்
கலந்ததய்யா பனமரம்
நமக்காக நம்மோடு
வாழும்மய்யா பனமரம்
சேரன் ஆண்டகாலம் முதல்
செல்போன்கள் காலம் வரை…
என்று பனைமரத்தின் மகிமையை பற்றி எழுதியிருக்கிறார்

படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில்
இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *