7G படம் எப்படி இருக்கு?

7 G

இயக்கம் – ஹாரூன்
நடிகர்கள் – சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட், ஸ்னேஹா குப்தா
இசை – சித்தார்த் விபின்
தயாரிப்பு – ட்ரீம் ஹவுஸ் – ஹாரூன்

ஒரு தம்பதிகள் தங்களது குழந்தையுடன் புதிதாக கட்டப்பட்ட அவர்களின் சொந்த வீட்டிற்கு குடி பெயற்கின்றனர் , நீண்ட நாள் கனவான இந்த இல்லத்தில் அந்த மூவரும் மகிழ்ச்சியுடன் வாழந்து வருகின்றனர், இந்நிலையில் அந்த கணவரின் உடன் பணி புரியும் ஒரு பெண் அவரை அடைய சில மாந்திரீக செயல்களில் ஈடுபடுகிறார், இந்நிலையில் வேலை காரணமாக அவர் வெளியூருக்கு செல்லும் சமயம் வருகிறது, அப்போது அந்த பெண் அவர்களது வீட்டில் சில மாந்திரிகம் செய்யப்பட பொம்மையை வைத்து விடுகிறாள், இதன் பின் அந்த பொம்மையால் சில அமானுஷ்யங்கள் அந்த வீட்டில் நடக்கிறது , இதன் பின் அந்த குடும்பம் அந்த அமானுஸ்யத்திலிருந்து தப்பித்தார்களா ? யார் எந்த பேய் அவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்பதே இப்படத்தின் மீதிக்கதை,

இந்தப் படம் ஒரு வழக்கமான ஒரு பேய் கலந்த திரில்லர் படமாக உருவாக்கியுள்ளது , 7G என்ற பெயரில் ஏற்கனவே சோனியா அகர்வால் நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கிய படம் மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்தது, அந்த எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் இந்தப் படம் உருவாக்கியுள்ளது,

இந்தப் படத்தில்  முக்கியமான திருப்புமுனையாக பயணித்திருக்கும் சோனியா அகர்வால், தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். அவரது நடிப்புதான் மொத்த படத்தையும் நகர்த்தியுள்ளது , படத்தின் மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் ஸ்முருதி வெங்கட், காதல், ஏக்கம், பயம், தைரியம் என அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்தி நடிப்பில் ஸ்கோர் செய்யக்கூடிய கதாபாத்திரத்தை சரியாக கையாண்டு கவனம் ஈர்க்கிறார்.

ஸ்முருதி வெங்கட்டின் கணவராக நடித்திருக்கும் ரோஷன் பஷீர், மனைவியுடன் ஒரு பாட்டு, அலுவலக தோழியுடன் ஒரு பாட்டு என்று பாட்டு நடிகராக பயணித்திருக்கிறாரே தவிர, திரைக்கதைக்குள் எட்டிக்கூட பார்க்கவில்லை. ஒரே ஒரு காட்சியில் மட்டும் திரைக்கதையில் சற்று தலை காட்டுபவர், அதன் பிறகு மீண்டும் வெளியூர் பறந்துவிடுகிறார். ரோஷன் பஷீரின் அலுவலக தோழியாக நடித்திருக்கும் சினேகா குப்தா, ஆசைப்பட்ட நபரை அடைவதற்காக மந்திரம், சூனியம் என்று முயற்சிக்கும் காட்சிகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், அடுத்தடுத்த காட்சிகளில் அவை அனைத்தும் காமெடி ஏரியாவாக மாறிவிடுவது பெருத்த ஏமாற்றம்.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார், இவரது இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே ரகம் என்றாலும், திகில் காட்சிகளில் பின்னணி இசைக்காக இன்னும் மெனக்கெட்டிருக்கலாம். இந்தப் படத்தில் இசையமைப்பாளராக சித்தார்த் விபின் கவனம் பெறவில்லை என்றாலும், நடிகராக கவனம் ஈர்க்கிறார். அதிலும், காமெடி கலந்த வில்லனாக அவர் நடித்த விதம் ரசிக்க வைக்கிறது. ஒளிப்பதிவாளர் கண்ணா, அடுக்குமாடி குடியிருப்பையும், அதனுள் இருக்கும் 7G எண் கொண்ட வீட்டை மட்டுமே காட்டி ரசிகர்களை பயமுறுத்த முயற்சித்திருக்கிறார். அதில் பல காட்சிகள் அவர் நினைத்து போல் ரசிகர்களை பயப்பட வைத்தாலும், மற்றவை மிக சாதாரணமாக பயணித்து எடுபடாமல் போய்விடுகிறது.

இந்தப் படத்தை எழுதி இயக்கியிருப்பதோடு, தயாரிப்பும் செய்துள்ளார் இயக்குனர் ஹாரூண், திகில் கதையை வழக்கமான ஃபார்மெட்டில் சொல்லியிருந்தாலும், பிளாக் மேஜின் போன்ற விசயங்களை பயன்படுத்தி கவனம் ஈர்க்கிறார். பிளாக் மேஜிக் மூலம் படத்தின் ஆரம்பத்திலேயே நம்மை கதைக்குள் பயணிக்க வைப்பவர், அடுத்தடுத்த காட்சிகளில் ஏதோ பெரிய விசயத்தை சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பையும் பார்வையாளர்கள் மனதில் ஏற்படுத்தி விடுகிறார். இது ஒரு பெரிய பிளஸ், படத்தின் மீதான கவனத்தை சிதற விடாமல் செய்துள்ளார், மேலும் அமானுஷ்யத்தை ஒரு விளையாட்டு பொம்மையாகவும் காட்டி சிறுவர்களின் கவனத்தை ஈர்த்துவிடுகிறார்.

மொத்தத்தில், இந்த ’7ஜி’ ஒரு த்ரில்லர் ஜி

. Rating 2.7/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *