விறுவிறுப்பான அரசியல் ஆக்ஷன் கதையான ‘சக்தி திருமகன் ‘ திரைப்படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது!

விறுவிறுப்பான அரசியல் ஆக்ஷன் கதையான ‘சக்தி திருமகன் ‘ திரைப்படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது!

சென்னை, அக்டோபர் 24, 2025: ‘சக்தி திருமகன்’ படத்தின் டிஜிட்டல் பிரீமியர் தற்போது பிரத்யேகமாக ஜியோஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது.

அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்க அவருடன் வாகை சந்திரசேகர், சுனில் கிரிபலானி, செல் முருகன், திருப்தி ரவீந்திரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசியலை பின்னணியாகக் கொண்டு உருவான இந்தக் கதை கிட்டுவின் (விஜய் ஆண்டனி) எழுச்சியை காட்டுகிறது. தனிப்பட்ட இழப்பில் இருந்து மீண்ட ஒருவன் ஒரு குறிக்கோளை நோக்கி பயணப்படுகிறான். வாழ்க்கை அவனை அரசியல், நேர்மை மற்றும் அதிகாரத்தின் வழியில் பயணப்பட வைக்கிறது. நீதி, லட்சியம் மற்றும் ஊழலால் பிணைக்கப்பட்ட ஒரு சமூகத்தில் மாற்றத்தின் விலை பற்றிய கேள்விகளை இந்தப் படம் ஆராய்கிறது.

தனது திறமையான நடிப்பால் ‘சக்தி திருமகன்’ கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் நடிகர் விஜய் ஆண்டனி. அருண் புருஷோத்தமன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் சிறப்பான ஒளிப்பதிவும் இசையும் பார்வையாளர்களுக்கு அற்புதமான சினிமா அனுபவத்தைக் கொடுக்கிறது. பல அடுக்குகள் கொண்ட இந்தக் கதை சிறப்பான அரசியல் ஆக்ஷன் டிராமா என ரசிகர்களும் விமர்சகர்களும் பாராட்டியுள்ளனர்.

தற்போதைய அரசியல் சூழலை தைரியமாகவும் நேர்மையுடனும் பதிவு செய்திருக்கும் ‘சக்தி திருமகன்’ படத்தை ஜியோஹாட்ஸ்டாரில் மட்டும் கண்டு மகிழுங்கள்!

ஜியோஹாட்ஸ்டார் பற்றி:

ஜியோஹாட்ஸ்டார் இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்று. இது ஜியோசினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் இணைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. நல்ல கதையம்சம், புதுமையான தொழில்நுட்பம் மற்றும் அர்ப்பணிப்புடன், ஜியோஹாட்ஸ்டார் இந்தியா முழுவதும் உள்ள அனைவருக்கும் பொழுதுபோக்கை மறுவரையறை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *