பூங்கா’ என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு வாழ்வியல்.

ஒரு பூங்காவில் கதையை உருவாக்கி, பூங்காவில் நடக்கும் சம்பவங்களை திரைக்கதை ஆக்கி, அங்கு நடப்பவர்களை நடிக்க வைத்து, அதற்கு “பூங்கா” என்றே தலைப்பு வைத்து, நவம்பர் 28’ம் தேதி திரைப்படத்தை ஜனரஞ்சகமாக வெளியிடுகிறார் இயக்குனர் கே.பி.தனசேகர்!

அழகு மூவி மேக்கர்ஸ் உருவாக்கும் “பூங்கா”

‘பூங்கா’ என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு வாழ்வியல். பலதரப்பட்ட மக்கள் ஒன்று கூடும் சங்கமம். சொர்க்கம் ஆகாயத்தில் இருக்கிறது என்பார்கள், பூங்கா மண்மீது உள்ள சொர்க்கம் என்கிறார் இயக்குனர் கே.பி.தனசேகர்.

ஒரு நாலு பசங்க பிரச்சனைகளோடு பூங்கா வருகிறார்கள். அங்கு அவர்களின் பிரச்சனை தீர்ந்ததா என்பதுதான் கதை.

கதாநாயகனாக கௌசிக் நடிக்கிறார். கதாநாயகியாக ஆரா நடிக்கிறார். இவர்களுடன் சசி தயா, பிரணா, பாலசுப்பிரமணியம், பூங்கா ராமு, திண்டுக்கல் மணிகண்டன், நோயல் ரெஜி, மேஜிக் சரவணகுமார், ஸ்மூல் ராஜா, சாய் ஜேபி, வரன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் கே.பி.தனசேகர். ஒளிப்பதிவு ஆர்.ஹெச்.அசோக், இசை அகமது விக்கி, எடிட்டிங் முகன் வேல், கலை குணசேகர், சண்டை பயிற்சி எஸ்.ஆர். ஹரி முருகன், நடனம் சுரேஷ் சித், பிஆர்ஓ கோவிந்தராஜ். தயாரிப்பு கே.பி.தனசேகர், பூங்கா ஆர்.ராமு லட்சுமி, கீதாஞ்சலி லெனினிய செல்வன் மூவரும் இணைந்து தயாரத்து உள்ளனர்.

“பூங்கா” நவம்பர் 28’ம் தேதி, மண் மீது சொர்க்கமாக வெளியாகிறது!

Poonga #Movie

November28 #Release

KP_Tanasekar

Mansoor_AliKhan

BalaSekaran

Perarasu

Java_Sundaresan

Jaguar_Thangam

R_Ramu_Lakshmi

Geethanjali_Leniniya_Selvan

Kaushik #Aara

Sasi_Dhaya

Magic_SaravanaKumar

Dindigul_Manikandan

PRO_Govindaraj

@GovindarajPro

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *