சென்சேஷனல் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர் ‘ரவுடி ஜனார்த்தனா’ படத்தில் இருந்து வெளியாகியுள்ளது!

சென்சேஷனல் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர் ‘ரவுடி ஜனார்த்தனா’ படத்தில் இருந்து வெளியாகியுள்ளது!

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரின் கீழ், தில் ராஜூ மற்றும் ஷிரீஷ் தயாரிப்பில், ரவி கிரண் கோலா இயக்கத்தில், நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் பான் இந்தியா ரூரல் ஆக்‌ஷன் கதையாக உருவாகி வரும் ‘ரவுடி ஜனார்த்தனா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது.

இன்று நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து பிறந்தநாள் சிறப்பு போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் விஜய் தேவரகொண்டா மழையில் முழுவதுமாக நனைந்து கையில் துப்பாக்கி பிடித்தபடி தீவிரமான தோற்றத்துடன் இருக்க, அவர் நெஞ்சின் மீது கால் வைத்தபடி கீர்த்தி சுரேஷூம் உள்ளார். இந்த ஜோடிகளுக்கு இடையேயான காதல் மற்றும் படத்தின் ஆக்‌ஷனை இந்த போஸ்டர் பிரதிபலிக்கிறது.

உலகம் முழுவதும் டிசம்பர் மாதத்தில் பெரிய திரையில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தை பார்க்க, விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள் மட்டுமல்லாது மற்ற பார்வையாளர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

நடிகர்கள்: விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர்.

தொழில்நுட்பக்குழு விவரம்:

தயாரிப்பு வடிவமைப்பாளர்: டைனோ சங்கர்,
ஒளிப்பதிவு: ஆனந்த் சி. சந்திரன்,
பேனர்: ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்,
தயாரிப்பாளர்கள்: தில் ராஜூ, ஷிரீஷ்,
மக்கள் தொடர்பு: தெலுங்கு- GSK மீடியா (சுரேஷ்- ஸ்ரீனிவாஸ்),
தமிழ்- சுரேஷ் சந்திரா,
கதை, இயக்கம்: ரவி கிரண் கோலா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *