
‘தங்களின் நட்பிற்கு யுவன் ஷங்கர் ராஜா தான் காரணம்’ – சிவா & பிரேம்ஜி
SUN NXT-இல் ஒளிபரப்பாகும் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியில் சிவா & பிரேம்ஜி அமரன் கலகல பேச்சு
SUN NXT டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்பாகி ரசிகர்களை ஈர்த்து வரும் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியின் புதிய எபிஸோடில் மிர்ச்சி சிவா மற்றும் பிரேம்ஜி ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் இந்த நிகழ்ச்சியில் தங்களுடைய ‘ஜல்சா பண்ணுங்கடா..’ ஸ்டைலில் உற்சாகமாக கலாய்த்து தள்ளினர். இவர்களின் வருகையால் நிகழ்ச்சியின் கொண்டாட்டம் பன்மடங்காக பெருகியது.
இந்நிகழ்ச்சியில் பிரேம்ஜியிடம் காணப்பட்ட மாற்றம் தான் ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளித்தது. திருமணத்திற்கு முன்பு படப்பிடிப்பு முடிந்ததும் உடன் நடிக்கும் சக நடிகர்களை அவர்களுடைய வீட்டிற்கு செல்ல விடாமல்.. பார்ட்டிக்கு அழைத்துச் செல்வதுதான் அவருடைய வழக்கமாக இருந்தது. ஆனால் திருமணத்திற்குப் பிறகு… தற்போது குடும்பமே முக்கியமானது என்றும், நாம் அனைவரும் பணி முடிந்த பிறகு வீட்டிற்கு தான் திரும்ப வேண்டும் என்று அவர் நிகழ்ச்சியில் பேசிய போது.. அங்கு இருந்தவர்களும், ரசிகர்களும் ஆச்சரியம் அடைந்தனர். சுருக்கமாக சொல்லப்போனால்.. ‘மச்சி ஓபன் தி பாட்டில் என்று பேசிய வாய்… தற்போது ‘மாமி ஓப்பன் தி ஊறுகாய் ஜார்’ என்ற அளவிற்கு பேசத் தொடங்கி இருக்கிறார். இதன் மூலம் பிரேம்ஜியிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.
சிவாவும், பிரேம்ஜியும் நெருங்கிய நட்பாக திகழ்வதன் பின்னணி குறித்து கேட்டபோது.. நாங்கள் இருவரும் நெருங்கிய நட்புடன் பழகுவதற்கு யுவன் ஷங்கர் ராஜா தான் காரணம். அதுமட்டுமல்ல.. அவருடைய ஸ்டுடியோவில் நாங்கள் இருக்கும்போது அந்த இடத்தையே கலகலப்பாக வைத்திருப்பது மட்டுமல்லாது அனைவரையும் சந்தோஷப்படுத்துபவர் யுவன்தான். மற்றவர்கள் அறிந்திறாத யுவனின் மற்றொரு பக்கத்தை நாங்கள் இருவரும் நேரில் பார்த்து உள்ளோம்” என இருவரும் ஒரே வாய்ஸில் பதிலளித்தனர். அத்துடன் யுவன் ஷங்கர் ராஜா எனும் இசை மேதையை பற்றி இவர்கள் இருவரும் பகிர்ந்து கொண்ட விசயங்கள் அனைத்தும்… யுவன் ஷங்கர் ராஜாவின் ரசிகர்கள் ஒவ்வொருவரும் பார்த்து ரசித்து கேட்டு கொண்டாட வேண்டிய விசயங்கள் என்றால்.. அது மிகையில்லை.
நிகழ்ச்சியில் முத்தாய்ப்பாக பிரேம்ஜி கரகாட்டம் ஆடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இதிலிருந்து பிரேம்ஜி இசையில் மட்டுமல்ல தான் ஒரு நடன சூறாவளி என்பதை நிரூபித்த தருணங்கள்… ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை வழங்கியது.
பிரேம்ஜி கரகாட்டம் ஆடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியதைப் போல்.. சிவாவும் தனது புதிய படத்தைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு, ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அவர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதுடன் ‘அகில உலக சூப்பர் ஸ்டார்’, என்ற பட்டத்தையும் பெற்று தந்த ‘தமிழ்ப்படம்’ திரைப்படத்தின் அடுத்த பாகம் தயாராகிறது என்றும், அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் ஸ்கிரீன் ஸ்பேசை பகிர்ந்து கொண்டதைப் பற்றியும் பாலிவுட் நடிகர் அமீர் கானுடன் நடனம் ஆடிய அனுபவத்தைப் பற்றியும், படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த பல சுவாரசியமான சம்பவங்களை சிவா சிலாகித்தபடியே பகிர்ந்து கொண்டார். அதனுடன் தான் நடித்த படத்தைப் பற்றி அவர் பகிர்ந்து கொண்ட சில தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால்… ‘ஜாலி ஓ ஜிம்கானா ‘ நிகழ்ச்சியின் இந்த எபிஸோடை அவசியம் பார்க்க வேண்டும்.
இந்த ‘ஜாலி ஓ ஜிம்கானா’ எபிஸோட் உங்களை வெகுவாக கவர்ந்தது என்றால்… இதற்கு முன் ஒளிபரப்பான எபிஸோடுகளை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும். கடந்த எபிஸோடில் நடிகர் ஹரிஷ் கல்யாண், தான் ஜோடியாக நடிக்க விரும்பும் நடிகையைப் பற்றி மனம் திறந்து பேசி இருந்தார். அத்துடன் ராப் பாடல்களை பாடியும், சிலம்பம் சுற்றியும் தன் திறமையை வெளிப்படுத்தியிருந்தார். அது மட்டுமல்ல அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரான ஜெகனையும் ஹரிஷ் கல்யாண் தன்னுடைய புத்திசாலித்தனமான பேச்சால் பாடாய் படுத்தி.. ஆச்சரியப்படுத்தினார்.
SUN NXT இல் பிரத்யேகமாக ஒளிபரப்பாகும் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான திரை பிரபலங்களின் ( தேவி ஸ்ரீ பிரசாத் – ஐஸ்வர்யா ராஜேஷ்- ஹரிஷ் கல்யாண்- சிவா – பிரேம்ஜி..) கலந்துரையாடலை நேரடியாக கண்டு மகிழுங்கள். ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் சன் நெக்ஸ்ட் இல் மட்டும் இதன் புதிய எபிசோடுகள் ஒளிபரப்பாகின்றன.
சன் நெக்ஸ்ட் பற்றி….
SUN NXT என்பது நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களின் விருப்பத்திற்குரிய பொழுதுபோக்கு தளவாகும். இது ஏழுக்கும் மேற்பட்ட மொழிகளில் நாலாயிரத்திற்கும் அதிகமான திரைப்படங்களையும், 44க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களையும் வழங்குகிறது. திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், லைவ் டிவி மற்றும் டிவிக்கு முன்பே பார்க்கும் வசதி கொண்ட நிகழ்ச்சிகள் என பல்வேறு வகையான உள்ளடக்கங்களைக் கொண்டுள்ள SUN NXT, உயர்தரமான தென்னிந்திய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் தாயகமாக திகழ்கிறது.