மூன்றாவது முறை தேசிய விருது பெற்ற ஜி .வி. பிரகாஷ் குமாருக்கு காசு மாலை அணிவித்து பாடகர் வேல்முருகன் வாழ்த்து!

மூன்றாவது முறை தேசிய விருது பெற்ற ஜி .வி. பிரகாஷ் குமாருக்கு காசு மாலை அணிவித்து பாடகர் வேல்முருகன் வாழ்த்து!

3வது தேசிய விருது : ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு பாடகர் வேல்முருகன் காசு மாலையுடன் பாராட்டு!

அண்மையில் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில் ஜி.வி. பிரகாஷ் குமார் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவர் மூன்றாவது முறையாக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுக்குத் தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மகிழ்ச்சிகர செய்தியை முன்னிட்டு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமாரைப் பின்னணி பாடகர் வேல்முருகன் நேரில் சந்தித்து புத்தம் புது நாணயங்களினால் உருவாக்கப்பட்ட காசு மாலையை அணிவித்துப் பாராட்டி வாழ்த்தினார். அத்துடன் சபரிமலை ஐயப்பன் கோவிலின் பிரசாதத்தையும் வழங்கினார்.

அப்போது பிரபல இசையமைப்பாளர் என். ஆர். ரகுநந்தன் உடன் இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *