யாழி பிலிம்ஸ் மற்றும் நீலம் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்த தலித் சுப்பையா – கலகக்காரர்களின் குரல் ஆவணத்திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு தகுதிப் பெற்று அகாடமி திரையிடல் அறைக்கு அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆவணப்படம் கேரளாவில் நடைபெற்ற IDSFFK 2025 சர்வதேச ஆவணப்படம் மற்றும் குறும்பட விழாவில் சிறந்த முழுநீள ஆவணப்பட விருதை வென்றுள்ளது. தற்போது ஆஸ்கார் விருதுகளுக்கான அகாடமி உறுப்பினர்கள் மற்றும் சர்வதேச திரைப்பட வல்லுநர்கள் நேரடியாகக் காணக்கூடிய வகையில் திரையிடல் அறைக்கு (Academy Screening Room) தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆவணப்படம் புரட்சிப் பாடகர் தலித் சுப்பையா அவர்களின் வாழ்க்கை, கலை, போராட்டம், அரசியல் விழிப்புணர்வு மற்றும் குரலற்றவர்களின் குரலாய் ஆதிக்கத்திற்கு எதிராக ஒலித்த அவரின் புரட்சிகர எழுத்துகள், பாடல்கள் உள்ளடக்கிய ஒரு வரலாற்றுப் பதிவாக உருவாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *