ஒரு நல்ல திரைப்படத்தை ஓடிடி தளத்தில் பெரிதும் கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள்’ என்கிறார் அப்புக்குட்டி!

‘ஒரு நல்ல திரைப்படத்தை ஓடிடி தளத்தில் பெரிதும் கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள்’ என்கிறார் அப்புக்குட்டி!

அப்புக்குட்டி கதையின் நாயகனாக நடித்து, இந்த வாரம் வெளிவந்திருக்கும் படம் ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’

முக்கியமான சில இயக்குனர்களுக்கு அப்புக்குட்டி தான் நடித்து வெளிவந்துள்ள ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ படத்தை திரையிட்டார். படத்தைப் பார்த்த இயக்குனர்கள் அனைவரும் அப்புக்குட்டியின் எதார்த்தமான நடிப்பை பாராட்டி, ‘ஒரு தேசிய விருது வாங்கிய நடிகரின் எதார்த்தமான நடிப்பு, நூறு சதவிகிதம் இந்தப் படத்தில் மிகத்துல்லியமாக தெரிகிறது’ என அனைவரும் பாராட்டினார்கள்.

விரைவில் இந்தப் படம் மிகப்பெரிய ஓடிடி தளம் ஒன்றில் வெளிவர பேச்சுவார்த்தை நடந்து கொண்டுள்ளது. தியேட்டரில் ரசிகர்கள் ஒரு நல்ல படத்திற்கு எப்படி வரவேற்பு கொடுக்கிறார்களோ அதைவிட, இந்த காலகட்டத்தில் ‘ஓடிடி தளத்தில் நல்ல படங்களுக்கு ரசிகர்களின் அமோக வரவேற்பு உள்ளது என்கிறார் நடிகர் அப்புக்குட்டி’. ஆகவே தான் நடித்த பிறந்தநாள் வாழ்த்துகள் ஓடிடி தளத்தில் மிகவும் கொண்டாடப்படும் என்று நம்பிக்கை கொள்கிறார்.

அப்புக்குட்டி கதையின் நாயகனாக நடித்துள்ள ‘ஜீவகாருண்யம்’, ‘வாழ்க விவசாயி’ என இவ்விரு படங்களும் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளது.

கதையின் நாயகனாக மட்டுமல்லாமல், தற்போது சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், சில படங்களில் நெகட்டிவ் ரோல்களிலும் அப்புக்குட்டி தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

‘அப்புக்குட்டி நண்பர்கள் நற்பணி மன்றம்’ தொடங்கி, நற்பணிகள் செய்துவருகிறார்!

தமிழ் திரை உலகில் தனக்கென தனி இடம் பிடிப்பது தான் தனது லட்சியம் என்று முடிவெடுத்து, தொடர்ந்து படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார் அப்புக்குட்டி!

@GovindarajPro

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *