தெய்வ பலத்திலே, தேர்தல் களத்திலே, முதல் முயற்சியிலேயே வெற்றிப்படி கட்டு, அதை எட்டு என்று எட்டிப் பிடித்திருக்கும் தொகுதிகளோ நூற்றெட்டு (108) வெற்றிக்கனியை தட்டி பறித்திருக்கும் நண்பர் விஜய்

தெய்வ பலத்திலே, தேர்தல் களத்திலே, முதல் முயற்சியிலேயே வெற்றிப்படி கட்டு, அதை எட்டு என்று எட்டிப் பிடித்திருக்கும் தொகுதிகளோ நூற்றெட்டு (108) வெற்றிக்கனியை தட்டி பறித்திருக்கும் நண்பர் விஜய் அவர்களை வாழ்த்துகிறேன். வெற்றி திலகமிட்டு அவரோடு தோளோடு தோள் நின்று, துணிவு கொண்டு, வெற்றி கண்டு இருக்கும் தமிழக வெற்றி கழகத்தின் வெற்றி உறுப்பினர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். அதே நேரத்தில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைய இருக்க கூடிய மற்ற கட்சி வெற்றி உறுப்பினர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். அதே நேரத்தில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டவர்கள் தோல்வியிலே துவளாதீர்கள். மனம் தளராதீர்கள். காலம் வரும் காத்திருங்கள் என்று அவர்களுக்கு என்னுடைய ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்…

இப்படிக்கு,
டிஆர் டாக்கீஸ்
டி.ராஜேந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *