
முதல்வர் விஜய் அவர்களுக்கு,
எழுத்தாளர் / இயக்குனர் லியாகத் அலிகான் அவர்களின் வாழ்த்துக்கள்!
வாழ்த்துகிறோம்!!!
சாதனைகளை வாழ்த்துகிறோம்!!!
சவால்களை வென்றெடுக்க
வாழ்த்துகிறோம்!!!
“தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்”
இது ஒரு தந்தை மகனுக்காக செய்ய வேண்டிய கடமை என்று வள்ளுவப் பெருந்தகை எழுதி அருளிய திருக்குறள்.
“மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்.” இது மகன் தந்தைக்கு செய்ய வேண்டிய கடமை என்று திருவள்ளுவர் நமக்குச் சொன்ன திருக்குறள். இந்த இரண்டு குறள்களையும்,உண்மையாக்கி காட்டியிருக்கிறார்கள்… நமது மூத்த உறுப்பினர் பல இளம் எழுத்தாளர்களுக்கு முன்னோடியாக இருந்தவர், திரைப்பட சங்கங்களுக்காக தனது அளப்பரிய அர்ப்பணிப்பை வழங்கியவர். வெற்றி பட இயக்குனர், மிகச் சிறந்த எழுத்தாளர் மதிப்பிற்குரிய திரு.S.A.சந்திரசேகர் அவர்களும்.. .
அவருடைய அருந்தவப் புதல்வன்,
இன்றைய இளம் தலைமுறையின் நம்பிக்கை நாயகன் திரையுலகிலே உச்ச நட்சத்திரமாக இருந்து, தமிழ்நாட்டின் அரசியலில் உச்ச நட்சத்திரமாக வளர்ந்து,
மாண்புமிகு மாணவனாக இருந்து,
இன்று மாண்புமிகு முதல்வராக உயர்ந்திருக்கும் மதிப்பிற்குரிய திரு.சி.ஜோசப் விஜய் அவர்களும்… இன்று தந்தை, மகன் இருவரின் லட்சியமும் நிறைவேறி இருக்கிறது. மாண்புமிகு முதல்வர் திரு.சி..ஜோசப் விஜய் அவர்களே… உங்களின் வெற்றி தமிழக மக்களின் வெற்றி. தமிழ் திரை உலகின் வெற்றி. உங்களுடைய ஆற்றலால், அறிவார்ந்த உழைப்பால்,
தமிழ்நாடு நிமிரட்டும்… தமிழ் திரையுலகம் செழிக்கட்டும்… நல்லாட்சி தாருங்கள்… நம் திரையுலகையும் பாருங்கள்…
அன்புடன்… லியாகத் அலிகான்,
பொதுச் செயலாளர்,
தென்னிந்தியத் திரைப்பட
எழுத்தாளர்கள் சங்கம்